விசாரணை அதிகாரியாக அர்ஜுன்...வெளியானது செகண்ட் சிங்கிள்
ஆக்சன் கிங் அஜித்துடன் நடித்த மங்காத்தா படத்தை இயக்கிய வெங்கட் பிரபு மற்றும் இரும்பு திரையில் அர்ஜுனுடன் பணிபுரிந்த நடிகர் விஷால் ஆகியோர் போஸ்டர்களை பகிர்ந்துள்ளார்.
அறிமுக இயக்குனர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரில்லர் படமான தீயவர் குலைகள் நடுங்க படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் இணைந்து நடித்து வருகிறார். இதில் விசாரணை அதிகாரி வேடத்தில் அர்ஜுனும், ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கான பள்ளியில் ஆசிரியராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த வருகின்றனர்.
படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது அர்ஜுன் இடம்பெற்றிருந்த செகண்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஆக்சன் கிங் அஜித்துடன் நடித்த மங்காத்தா படத்தை இயக்கிய வெங்கட் பிரபு மற்றும் இரும்பு திரையில் அர்ஜுனுடன் பணிபுரிந்த நடிகர் விஷால் ஆகியோர் போஸ்டர்களை பகிர்ந்துள்ளார். இதில் ஸ்டைலிஷ் லுக்கில் விறுவிறுப்பான அர்ஜுனை பார்க்க முடிகிறது. வரும் ஜனவரி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிப் போன இதன் வெளியிட்டு தேதியை இன்னும் அறிவிக்கவில்லை.
ஜி எஸ் ஆர்ட்ஸ் பேனரில் ஜி அருள் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். இதன் கதை ஒரு பள்ளி அமைப்பில் நடைபெறுகிறது. மேலும் இது மன இறுக்கம் மற்றும் குழந்தைகளை பற்றி பேசுவதாக கூறப்படுகிறது. பரத் ஆசீவகனின் இசை ,நவநீதன் சுந்தர்ராஜன் வசனம், ராஜசேகர் மற்றும் விக்கி ஆக்ஷன் காட்சிகளை அமைத்துள்ளனர்.