ஜெயிலர் 2; அந்த படம் முடிந்ததும் பான் இந்தியன் நடிகருடன் இணைகிறாரா நெல்சன்? லேட்டஸ்ட் அப்டேட்!
Nelson Dilipkumar : ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாக பணிகளை முடித்த பிறகு பிரபல பான் இந்தியா நடிகருடன் நெல்சன் இணையுள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
Nelson Dilipkumar
தமிழ் சினிமாவில் "கோலமாவு கோகிலா" என்கின்ற திரைப்படத்தின் முதல் தனது கலை உலக பயணத்தை தொடங்கிய இயக்குனர் தான் நெல்சன் திலிப்குமார். நகைச்சுவை கலந்த கதைகளத்தை தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்து வெகு சில திரைப்படங்கள் மூலம் மிகப்பெரிய இடத்தை பிடித்தவர் அவர் என்றால் அது மிகையல்ல. நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான "பீஸ்ட்" திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும், விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் அந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
Kolamavu Kokila
இந்த சூழலில் தான் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கடந்த 50 ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் என்கின்ற திரைப்படத்தை இயக்கி அதை மெகா வெற்றியாக மாற்றினார். கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கி இப்போது வரை, தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த திரைப்படமாக ஜெயிலர் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த படம் உலக அளவில் சுமார் 640 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் திரைப்பட பணிகளை முடித்த பிறகு வேட்டையன் திரைப்பட பணிகளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முடித்தார்.
Beast Movie
அப்போதே ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று அதிகாரப்பூர் அறிவிப்புகள் வெளியானது. இந்த சூழலில் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் நிலையில், அப்படப் பணிகளை முடித்த உடனே சில கால ஓய்வுக்கு பிறகு நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார்.
Junior NTR
இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி முடித்ததும் இப்போது பாலிவுட் உலகில் களமிறங்கி பான் இந்தியா நடிகராக மாறி இருக்கும் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரை வைத்து ஒரு திரைப்படத்தை அவர் இயக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்னும் நேரடியாக தமிழ் திரைப்படங்களில் ஜூனியர் என்டிஆர் நடிக்கவில்லை என்றாலும், தமிழ் மக்கள் மத்தியிலும் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. நெல்சன் சொன்ன கதை NTRக்கு ரொம்பவும் பிடித்துபோய்யுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கங்குவா; தீபாவளிக்கு வெளியிடாதது ஏன்? கணக்கு போட்டு தெளிவாக பதில் சொன்ன ஞானவேல் ராஜா!