- Home
- Cinema
- இளையராஜா தொடர்ந்த வழக்கு: ஓடிடியிலிருந்து நீக்கப்பட்ட அஜித் படம்; ஓடிடியில் பார்க்க முடியாது!
இளையராஜா தொடர்ந்த வழக்கு: ஓடிடியிலிருந்து நீக்கப்பட்ட அஜித் படம்; ஓடிடியில் பார்க்க முடியாது!
அஜித் படம் குறித்து இளையராஜா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் அஜித் படத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

குட் பேட் அக்லீ படம்
தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான அஜித் படத்திற்கே இந்த நிலைமை என்று சொல்லும் அளவிற்கு குட் பேட் அக்லீ படம் இந்தியாவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இளையராஜா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அரசிக்கும் சதீஷூக்கும் திருமணமா? அரசியின் முடிவு என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீக்ரெட்ஸ்!
இளையராஜா தொடர்ந்த வழக்கு
இளையராஜா தொடர்ந்த வழக்கு குறித்து முடிவு எடுக்கப்பட்ட பின்னர் மீண்டும் நெட்பிளிக்ஸ் குட் பேட் அக்லீ படத்தை ஓடிடி தளத்தில் பதிவிடும். அதுவரையில் இந்தியாவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி மூலமாக குட் பேட் அக்லீ படத்தை பார்ப்பதற்கான வாய்ப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு திரைக்கு வந்த அஜித்தின் விடாமுயற்சி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியை தழுவிய நிலையில் இந்த ஆண்டே வெளியான படம் தான் குட் பேட் அக்லீ.
இயக்குநர் ஆதித் ரவிச்சந்திரன்
இயக்குநர் ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சிம்ரன், பிரியா வாரியர், அர்ஜூன் தாஸ், பிரபு, யோகி பாபு, சுனில், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் பலரது நடிப்பில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி வெளியான படம் தான் குட் பேட் அக்லீ. இந்த படம் ரூ.270 கோடி வரையில் எடுக்கப்பட்ட நிலையில் ரூ.300 கோடி வரையில் வசூல் குவித்ததாக கூறப்படுகிறது.
பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விடும் ரஜினிகாந்தின் டாப் 3 படங்கள்: கூலி படத்திற்கு 3ஆவது இடம்!
3 பாடல்களுக்கு எதிராக இளையராஜா தொடர்ந்த வழக்கு
இந்த படத்தில் பல படங்களின் ரெபரன்ஸ் இருந்த நிலையில் படத்தில் இடம்பெற்ற 3 பாடல்களுக்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. பாடல்களை படத்தில் பயன்படுத்த தடை விதித்துள்ளது நீதிமன்றம். பதிப்புரிமை மீறல் புகாரின் அடிப்படையில் இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் தொடர்பாக இளையராஜா புகார் அளித்திருந்தார். இரண்டு வாரங்களுக்குள் பட தயாரிப்பாளர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5 கோடி ரூபாய் இழப்பீடு
தனது பாடல்கள் அனுமதியின்றி படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது பதிப்புரிமைச் சட்டத்தை மீறுவதாகவும் இளையராஜா தனது மனுவில் தெரிவித்திருந்தார். 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். பாடல்களுக்கு உரிமையாளர்களிடமிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளதாக பட தயாரிப்பாளர்கள் முன்னதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
குட் பேட் அக்லி
ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படத்திற்கு எதிராக கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். படத்தில் அனுமதியின்றி தனது 3 பாடல்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும், இதற்காக 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அப்படி வழங்காவிட்டால் ஏழு நாட்களுக்குள் பாடல்களை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டிருந்தார்.
இளையராஜா நோட்டீஸ்
இழப்பீடு வழங்கப்படவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இளையராஜா எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கு முன்னரும் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி பல திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.