இது சும்மா டிரைலர் தான்... இன்னும் நிறையா இருக்கு..! அடுத்தடுத்து ஹனிமூன் ட்ரிப் செல்ல உள்ள விக்கி - நயன் ஜோடி
Nayanthara Honeymoon : நடிகை நயன்தாராவுக்கு அடுத்தடுத்து படப்பிடிப்பு இருப்பதனால் தற்போது சிம்பிளாக ஹனிமூன் ட்ரிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்ப உள்ளாராம்.
போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவனுக்கு, தமிழ் திரையுலகில் திருப்புமுனையாக அமைந்தது அவரின் இரண்டாவது படமான நானும் ரவுடி தான். அவரது சினிமா கெரியருக்கு மட்டுமின்றி அவரது வாழ்க்கையிலும் இப்படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஏனெனில் இப்படம் மூலம் தான் நடிகை நயன்தாரா மீது காதல் வயப்பட்டார் விக்கி.
இப்படத்தின் மூலம் மலர்ந்த இவர்களது காதல் அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்தது. கடந்த ஜூன் 9-ந் தேதி விக்கி - நயன் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்துக்கு பின் திருப்பதி மற்றும் கேரளாவில் உள்ள கோவில்கள் சிலவற்றிற்கு சென்று சாமி தரிசனம் செய்த இந்த ஜோடி தற்போது ஹனிமூன் சென்றுள்ளனர்.
விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் தற்போது தாய்லாந்து நாட்டுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கி இருவரும் ஜோடியாக ஹனிமூனை கொண்டாடி வருகின்றனர். அங்கு எடுத்த புகைப்படங்களையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தினந்தோறும் வெளியிட்டு வருகிறார்.
விக்கி - நயன் ஜோடியின் இந்த ஹனிமூன் ட்ரிப் வெறும் டிரைலர் தானாம். அடுத்தடுத்து நடிகை நயன்தாராவுக்கு படப்பிடிப்பு இருப்பதனால் தற்போது சிம்பிளாக இந்த ஹனிமூன் ட்ரிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்ப உள்ள இந்த ஜோடி, கைவசம் உள்ள படங்களை விரைவாக முடித்துவிட்டு, பல்வேறு நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்களாம்.
இதையும் படியுங்கள்... திருச்சிற்றம்பலம் படத்துக்காக தனுஷ் - அனிருத் காம்போவில் உருவான தர லோக்கல் சாங்... எப்போ ரிலீஸ் தெரியுமா?