திருச்சிற்றம்பலம் படத்துக்காக தனுஷ் - அனிருத் காம்போவில் உருவான தர லோக்கல் சாங்... எப்போ ரிலீஸ் தெரியுமா?
Thiruchitrambalam : திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் அப்டேட்டை அண்மையில் வெளியிட்ட படக்குழு தற்போது அதன் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் பிசியான இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் கடந்த 2011-ம் ஆண்டு ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ரிலீசான 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்படத்தின் மூலம் அவர் உலகளவில் பாப்புலரும் ஆனார். அதற்கு காரணம் அப்படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடல் தான்.
தனுஷ் - அனிருத் காம்போவில் உருவான இப்பாடல் பட்டிதொட்டியெங்கு வைரல் ஆனது. இதையடுத்து இவர்கள் காம்போவில் வெளியாகும் பாடலுக்கு தமிழ் சினிமாவில் தனி மவுசு இருந்தது. அந்த வகையில் வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்கமகன் என தனுஷுடன் அடுத்தடுத்த படங்களில் பணியாற்றிய அனிருத் கடந்த 2015-ம் ஆண்டுக்கு பின் அவருடன் பணியாற்றவில்லை.
இந்நிலையில், தற்போது 7 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் தனுஷ் - அனிருத் காம்போ மீண்டும் இணைந்துள்ளது. அதன்படி தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திருச்சிற்றம்பலம் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தை மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியுள்ளார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளார்.
திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் அப்டேட்டை அண்மையில் வெளியிட்ட படக்குழு தற்போது அதன் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் பாடல் வருகிற ஜூன் 24-ந் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். தாய்க்கிழவி என பெயரிடப்பட்டுள்ள இப்பாடலை தனுஷ் பாடியுள்ளதோடு பாடல் வரிகளையும் அவரே எழுதி உள்ளார்.
இதையும் படியுங்கள்... வாடகைத் தாய் மூலம் குழந்தையா?... துருவி துருவி கேட்ட நெட்டிசன்ஸ்... வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த சின்மயி