வாடகைத் தாய் மூலம் குழந்தையா?... துருவி துருவி கேட்ட நெட்டிசன்ஸ்... வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த சின்மயி
chinmayi : பாடகி சின்மயி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தாரா என்கிற கேள்வியும் நெட்டிசன்கள் மனதில் எழுந்தது. இதனை அவரிடமே ஏராளமானோர் கேட்டுள்ளனர்.
மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படம் மூலம் தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. அப்படத்தில் இவர் பாடிய ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடல் மிகவும் பேமஸ் ஆனதால் இவருக்கு அடுத்தடுத்து யுவன், இளையராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், இமான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.
இதன் மூலம் குறுகிய காலத்திலேயே முன்னணி பாடகியாக உருவெடுத்தார் சின்மயி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் ராகுல் ரவீந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் தொடர்ந்து பாடி வந்த சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது மீடூ புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், பாடகி சின்மயி - ராகுல் ரவீந்திரன் தம்பதிக்கு கடந்த ஜூன் 21-ந் தேதி இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. குழந்தை பிறந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் அவர்களின் பிஞ்சு விரல்களை பிடித்தவாரு போட்டோ போட்டு அவர்களுக்கு ட்ரிப்தா மற்றும் ஷர்வாஸ் என பெயரிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார் சின்மயி.
இதையும் படியுங்கள்...எஸ்பிபி சரணை திருமணம் செய்ய ரெடியான சோனியா அகர்வால் ? அடுத்த போஸ்டில் உண்மையை உடைத்த சரண்
இதையடுத்து சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்தாலும், மறுபுறம் அவர் கர்ப்பமாக இருந்தபோது எடுத்த புகைப்படம் ஒன்றைக் கூட இதுவரை வெளியிட்டதில்லை என்பதால், அவர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தாரா என்கிற கேள்வியும் நெட்டிசன்கள் மனதில் எழுந்தது. இதனை அவரிடமே ஏராளமானோர் கேட்டுள்ளனர்.
இந்த கேள்விக்கு சின்மயி விளக்கம் அளித்துள்ளார். அதில அவர் கூறியதாவது : “நான் கர்ப்பமாக இருக்கும்போது புகைப்படங்களை வெளியிடாததால், நிறைய பேர் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தீர்களா என கேட்கிறார்கள், அவர்களை நான் முற்றிலும் நேசிக்கிறேன். பர்சனல் விஷயம் என்பதால் நான் பாதுகாத்து வந்தேன், எனது நெருங்கிய வட்டத்துக்கு மட்டும் தெரியும்.
எனது குழந்தைகளின் புகைப்படங்களை நீண்ட காலத்துக்கு சமூக வலைதளங்களில் வெளியிட மாட்டேன். ஆபரேஷன் மூலம் தான் இரட்டை குழந்தைகள் பிறந்தது. அந்த சமயத்தில் நான் பஜனை பாடிக் கொண்டிருந்தேன்” எனவும் சின்மயி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... Singer Chinmayi Sripaada Baby: இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த சின்மயி...பெயரோடு அவரே வெளியிட்ட கியூட் போட்டோ...