எஸ்பிபி சரணை திருமணம் செய்ய ரெடியான சோனியா அகர்வால் ? அடுத்த போஸ்டில் உண்மையை உடைத்த சரண்
சமீபத்தில் உலா வரும் புகைப்படங்கள் திருமண வதந்திகளைத் தூண்டிவிட்டன மற்றும் ரசிகர்கள் இரு பிரபலங்களின் டைம்லைன்களிலும் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
sonia agarwal, spb charan
சமீபத்தில் மறைந்த பாலசுப்ரமணியத்தின் மகனும் பிரபல நடிகருமான எஸ்பிபி சரண் உடன் சோனியா அகர்வால் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இருவரும் அவரவர் சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்தனர். அதோடு , "ஏதோ புதியது உருவாகிறது" என்று எழுதியுள்ளார். இது பல யூகங்களுக்கு வழி வகை செய்துள்ளது.
sonia agarwal, spb charan
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சோனியா அகர்வால், ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘மதுர’, ‘கோவில்’, ‘புதுப்பேட்டை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.
மேலும் செய்திகளுக்கு... Actor Vijay Varisu Second :இந்த போஸ்டரும் ஓல்ட் ஸ்டைலா இருக்கே? நெட்டிசன்களிடம் படாதபாடு படும் தளபதி 66 லுக்ஸ்
sonia agarwal, spb charan
செல்வராகவனை காதலித்து கடந்த 2006 இல் திருமணம் செய்துகொண்ட சோனியா பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2010 இல் விவாகரத்து செய்தார்கள். அதன்பிறகு தனிமையில் இருந்த சோனியா தற்போது சில திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது பரவி வரும் புகைப்படம் திருமண வதந்திகளைத் தூண்டிவிட்டன மற்றும் ரசிகர்கள் இரு பிரபலங்களின் டைம்லைன்களிலும் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். மேலும் இது இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கான விளம்பரமாக இருக்கலாம் என்று ஒரு பிரிவினர் நம்புகிறார்கள்.
மேலும் செய்திகளுக்கு... Vijay Varisu Second look: விஜய்யின் பிறந்த நாள் ட்ரீட்டாக வாரிசு பட செகண்ட் லுக் வெளியானது....இணையத்தில் வைரல்
sonia agarwal, spb charan
இந்நிலையில் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார் எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் சோனியா அகர்வால், எஸ்பிபி சரண், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் உள்ளனர் அதோடு அதில் வெப் சீரிஸ் என்கிற ஹேஷ் டேக்கும், பிலிம் புரடக்ஷன் என பதிவிட்டுள்ளார். இதன்படி ஏற்கனவே வைரலாக போட்டோஸ் வெப் சீரிஸ் விளம்பரம் என்பது உறுதியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு... Vijay Birthday: விஜய்யை நம்பர் 1 இடத்திற்கு உயர்த்திய ஐகானிக் திரைப்படங்கள்...வசூல் நாயகன் பிறந்தநாள் ஸ்பெஷல்