MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Nayanthara Birthday: 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நயன்தாரா பற்றி பலரும் அறிந்திடாத சில சுவாரஸ்யமான உண்மைகள்!

Nayanthara Birthday: 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நயன்தாரா பற்றி பலரும் அறிந்திடாத சில சுவாரஸ்யமான உண்மைகள்!

மலையாள நடிகையான நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் (lady Super Star Nayanthara) என்கிற அந்தஸ்திற்கு சொந்தமாகியது தமிழ் திரையுலகம் தான். தெலுங்கு மற்றும் மலையாளத்தில் முன்னனணி நடிகர்களுடன் நடித்து, ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார். குறிப்பாக தென்னிந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான நயன்தாரா இன்று 37 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சரி இவரை பற்றி பலரும் அறிந்திடாத சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ...  

2 Min read
Author : manimegalai a
Published : Nov 18 2021, 12:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

நயன்தாரா பெங்களூரில் பிறந்தவர். இவரது உண்மையான பெயர் டயானா மரியம் குரியன். கேரள மாநிலம் திருவல்லாவை சேர்ந்த கொடியாட்டு குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தவர்.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212

இவரது தந்தை இந்திய விமானப்படை அதிகாரி. எனவே டெல்லி, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.

 

312

துருவல்லாவில் உள்ள மார்த்தோமா கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.

 

412

‘மனசினக்கரே’ படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் நயன்தாரா. இவர் மலையாளத் அறிமுகமான இந்த திரைப்படம் 2003 ஆம் ஆண்டு வெளியானது.  இரண்டு வருடத்திற்கு பின்னர் தமிழில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான 'ஐயா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

 

512

அடுத்தடுத்து, சந்திரமுகி, கஜினி, கல்வனில் காதலி போன்ற படங்களில் நடித்தார். பின்னர் தெலுங்கு பட வாய்ப்புகளும் இவரது கதவை தட்ட, 2006 ஆண்டு 'லட்சுமி' என்கிற படத்தில் அறிமுகமானார்.

 

612

2010 இல், நயன்தாரா கன்னடத் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்தார். ‘சூப்பர்’ என்கிற படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின்னர் நயன்தாரா கன்னட படங்களில் நடிக்க வில்லை. தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாள படங்களிலேயே அதிக கவனம் செலுத்தினார்.

 

712

இவருடைய நடிப்பில் வெளியாகி ரசிகர்களை அதிகம் கவர்ந்த படங்கள் என்றால்... மாயா (2015), தனி ஒருவன் (2015), நானும் ரவுடி தான் (2015),  ராஜா ராணி ( 2013) இருமுகன் (2016), அறம் (2017), கோலமாவு கோகிலா (2018) இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகம் ரசிக்கப்பட்டதோடு சூப்பர் ஹிட் படமாகவும் மாறியது.

 

812

திரையுலகில் இவரது முதல் காதல் கிசுகிசுப்பு  நடிகர் சிலம்பரசனுடன் தான்.  ‘வல்லவன்’ படத்தில் இருவரும் ஜோடியாக நடித்த பிறகு இவர்களது உறவு மலர்ந்தது. பின்னர், திடீர் கருத்து வேறுபாடு காரணமாக இவர்களது காதல் முறிந்தது.

 

912

இதை தொடர்ந்து நயன்தாரா பிரபுதேவாவுடன் லிவிங் டூ  கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அந்த உறவிலும் விரிசல் ஏற்ப்பட்டது.

 

1012

தற்போது நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் லிங்க் டூ கெதர் வாழ்க்கை முறையில் வாழ்ந்து வருகிறார். சுமார் 6 வருடங்களாக இந்த ஜோடி காதலித்து வரும் நிலையில், அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

1112

நயன்தாராவைப் பற்றிய மற்றொரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், ஆகஸ்ட் 2017 இல் அவர் தனது மதத்தை இந்துவாக மாற்றிக்கொண்டார் என கூறப்படுகிறது. சென்னை ஆர்ய சமாஜ் கோவிலுக் அவர் சென்றதாகவும், அங்கு அவர் இந்துவாக மாறுவதற்கான அனைத்து நடைமுறைகளும், சடங்குகளும் நடந்ததாக கூறப்படுகிறது.

 

1212

இதுவரை பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ள நயன்தாரா,  2007 ஆம் ஆண்டு சிறந்த தென்னிந்திய நடிகைக்கான  பிலிம்பேர் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sai Abhyankkar : அனிருத்தை விட டபுள் மடங்கு பிசியான சாய் அபயங்கர்! அவர் கைவசம் உள்ள ஒரு டஜன் படங்கள் என்னென்ன?
Recommended image2
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Recommended image3
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved