- Home
- Cinema
- மகன்களின் அன்புக்கு அடிமையான விக்னேஷ் சிவன் - நயன்தாரா... உயிர், உலகத்துடன் எடுத்த கியூட் போட்டோ வைரல்
மகன்களின் அன்புக்கு அடிமையான விக்னேஷ் சிவன் - நயன்தாரா... உயிர், உலகத்துடன் எடுத்த கியூட் போட்டோ வைரல்
இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது மகன்கள் மற்றும் காதல் மனைவி நயன்தாரா ஆகியோருடன் எடுத்த கியூட்டான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் 7 ஆண்டுகள் காதலித்து, கடந்தாண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் கடற்கரையோரம் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்த நான்கே மாதத்தில் இந்த ஜோடிக்கு குழந்தையும் பிறந்தது.
இவர்கள் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். அந்த குழந்தைகளுக்கு உயிர், உலகம் எனவும் பெயரிட்டனர். இவர்கள் விதிகளை மீறி வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொண்டதாக கூறி சர்ச்சையும் எழுந்தது. இதையடுத்து அவர்கள் உரிய ஆதாரங்களை அளித்த பின்னரே அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மகன்கள் பிறந்த பின்னர் கடந்த மூன்று மாதங்களாக படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளாமல் இருந்து வந்த நயன்தாரா, மகன்களுடன் நேரத்தை செலவழித்து வந்தார்.
இதையும் படியுங்கள்... மீண்டும் ஒரு ‘ராஜா ராணி’.. பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங் - நயன்தாராவின் 75-வது படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ
தற்போது மீண்டும் ஷூட்டிங்கில் பிசியாகி உள்ள நயன்தாரா, ஜவான் படத்தில் நடித்து வருகிறார். ஷூட்டிங் முடிந்ததும் மகன்களை கவனித்துக் கொள்வதிலேயே முழு நேரத்தையும் செலவழித்து வருகிறாராம் நயன். அந்த வகையில், தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது மகன்கள் மற்றும் காதல் மனைவி நயன்தாரா ஆகியோருடன் எடுத்த கியூட்டான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.
அந்த புகைப்படத்தில் மகன்கள் இருவரும் விக்கி - நயன் ஜோடியின் கையை பிடித்திருக்கின்றனர். விக்னேஷ் சிவன் பதிவிட்ட இந்த கியூட்டான புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. குழந்தை பிறந்த பின்பும் விக்கி - நயன் ஜோடி குறையாத காதலுடன் இருப்பதை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதாகவும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படத்திற்கு இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை... தங்க, வைர நகைகளை அபேஸ் பண்ணியது யார்? போலீசார் தீவிர விசாரணை