- Home
- Cinema
- Nayanthara Studio: 7000 அடியில் வீட்டையே கலைநயம் மிக்க ஸ்டுடியோவாக மாற்றிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்!
Nayanthara Studio: 7000 அடியில் வீட்டையே கலைநயம் மிக்க ஸ்டுடியோவாக மாற்றிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்!
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும், தங்களின் கலைநயம் மிக்க வீட்டை ஒரு ஸ்டுடியோவாக மாற்றி உள்ளதாக அதன் வீடியோஸ் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

போயஸ் கார்டனில், வீடு வாங்க வேண்டும் - அல்லது கட்ட வேண்டும் என்பது பல பிரபலங்களின் கனவு என்று கூட கூறலாம். அப்படி தான் நடிகை நயன்தாராவும், போயஸ் கார்டனில் வீடு வாங்க கடந்த 10 வருடங்களாகவே முயன்றதாக கூறப்பட்டது. ஒருவழியாக கடந்த சில வருடங்களுக்கு முன் மிகப்பெரிய தொகையை கொடுத்து, அங்கு ஒரு வீட்டை வாங்கிய நயன்தாரா பின்னர் அந்த வீட்டை இடித்துவிட்டு தன்னுடைய கனவு வீட்டை அங்கு கட்ட துவங்கினார்.
7000 சதுர அடியில் - 100 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது
7000 சதுர அடியில், 100 கோடி செலவில் 3 தளங்களோடு இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. இந்த வீட்டின் கீழ் தளம் முழுவதும் கண்ணை கவரும் கலைநயம் மிகுந்த பொருட்களோடு ஒரு ஸ்டுடியோ போல் வடிவமைத்துள்ளனர்.
வீட்டையே ஸ்டுடியோவாக மாற்றி உள்ளனர்
தற்போது முதல் முறையாக தன்னுடைய ஒட்டு மொத்த ஸ்டுடியோவின் அழகையும் ரசிகர்களுக்கு வெளிப்படுத்தும் விதத்தில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இதுகுறித்த புகைப்படங்கள், மற்றும் வீடியோக்களை வெளியிட வைரலாக பார்க்கப்படுவதோடு பிரமிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
நம்புங்கப்பா இது அரண்மனை இல்ல; நயன்தாராவின் போயஸ் கார்டன் வீடு - வைரலாகும் போட்டோஸ்
சினிமாவையே மிஞ்சிம் கலைநயம்
நயன்தாரா மற்றும் விக்கி இருவருக்குமே பழங்கால பொருட்கள், மற்றும் கலைநயம் மிகுந்த பொருட்கள் மிகவும் பிடிக்கும் என்பதாலேயே இந்த ஸ்டுடியோவை..... சினிமாவையே மிஞ்சிம் வகையில் உருவாக்கி உள்ளனர்.
அருங்காட்சியகத்தை பார்ப்பது போல் ஃபீல்
வீட்டின் தரை முதல், படிக்கட்டு, மாடியில் உள்ள தோட்டம், டெரசில் உள்ள ரூம், மோங்கில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பொம்பைகள், ஆளுயர தாழி என இதை பார்க்கும் போது ஒரு அருங்காட்சியகத்தை பார்ப்பது போல் ஃபீல் ஆகிறது.
காற்றோட்டம் நிறைந்த பங்களா
பெரும்பாலும் மரங்களால் ஆன பொருள்களையே வீடு முழுவதும் பார்க்க முடிகிறது. அதே போல் மிகவும் காற்றோட்டமாகவும், வீட்டுக்குள் சூரிய வெளிச்சம் ஊடுருவி வருவது போலவும், வீடு கட்டமைக்கப்பட்டுள்ளது.
100 கோடி கொடுத்தாலும் அந்த ஹீரோவுடன் நடிக்க மாட்டேன் – நயன்தாரா!
நயன்தாரா பிரமாண்ட வீடு
கீழ்தளம் இப்படி இருந்தாலும், முதல் தளத்தில் தான் நயன்தாரா தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளோடு வசித்து வருகிறார். அங்கு தான் கிச்சன், பெட்ரூம் போன்றவை உள்ளது.
நயன்தாரா வசித்து வரும் 2-ஆவது தளம்
இதை தவிர்த்து இரண்டாவது தளத்தில் குழந்தைகளுக்கான பிளே ஸ்டேஷன் போன்ற இடமும், நயன் - விக்கி திரைப்பட பணிகள் குறித்து பேசும் இடமும் உள்ளதாக கூறப்படுகிறது.
போயஸ் தோட்டத்தில் உள்ள முக்கிய பிரபலங்கள் வீடு
போயஸ் கார்டனில் பல சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வீடு, நடிகர் தனுஷின் வீடு, வெங்கட் பிரபு வீடு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீடு, மறைந்த முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி வீடு போன்ற பலரது வீடு உள்ளது.
ரூ.100 கோடி செலவில் நயன்தாரா கட்டிய வீட்டை பார்த்திருக்கிறீர்களா?
போயஸ் தோட்டத்தில் பிரமாண்ட வீடுகள்
ஆனால் அவர்கள் வீடுகளை விட தற்போது பிரமாண்டமாக போயஸ் கார்டனில் உயர்ந்து நிற்பது தனுஷின் வீடும், நயன்தாராவின் வீடும் தான்.