சூர்யாவுக்கு வில்லன் இவர்தானா?... கங்குவா படக்குழு பொத்தி பொத்தி பாதுகாத்து வச்சிருந்த விஷயம் லீக் ஆகிடுச்சே!
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்து வரும் கங்குவா திரைப்படத்தின் வில்லன் யார் என்கிற அப்டேட் லீக் ஆகி உள்ளது.
Kanguva
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கி வரும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். முழுக்க முழுக்க பேண்டஸி கதையம்சம் கொண்ட படமாக கங்குவா உருவாகி வருகிறது. இப்படத்திற்காக மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார் சூர்யா.
Kanguva
கங்குவா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கங்குவா படத்தில் நடிகர் சூர்யா, விதவிதமான கெட் அப்களில் தோன்றுவார் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வருகிற ஜூலை 23-ந் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்தநாளன்று ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சூர்யாவின் கெரியரிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக கங்குவா இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... பர்ஸ்ட் கர்ப்பமாகனும்... அப்புறம் தான் திருமணம் செய்துகொள்வேன் - புது குண்டை தூக்கிபோட்ட தனுஷ் பட நடிகை
Kanguva
கங்குவா படத்தின் ஷூட்டிங் முடியும் முன்னரே அப்படத்தின் பிசினஸ் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இப்படத்தின் இந்தி உரிமைகள் மட்டும் ரூ.100 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இதன் இசை உரிமையும் ரூ.10 கோடிக்கு மேல் விற்பனை ஆகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தை இந்தியா முழுவதும் 10 மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்களாம்.
Natty Natraj
இப்படி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் விதமாக நாளுக்கு நாள் ஒரு அப்டேட் வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், தற்போது கங்குவா படத்தில் வில்லனாக நடிப்பது யார் என்கிற அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி நட்ராஜ் வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. கர்ணன், நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய நட்டி, சூர்யாவுடன் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... விஜய் அரசியலுக்கு தகுந்த நபரா??- இயக்குநர் லோகேஷ் கனகராஜின் எதிர்பாராத பதில்! வீடியோ