பர்ஸ்ட் கர்ப்பமாகனும்... அப்புறம் தான் திருமணம் செய்துகொள்வேன் - புது குண்டை தூக்கிபோட்ட தனுஷ் பட நடிகை
கர்ப்பமான பின்னர் தான் திருமணம் செய்துகொள்வேன் என தனுஷ் பட நடிகை ஒருவர் கூறி உள்ளது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி 6 தேசிய விருதுகளை வென்ற ஆடுகளம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் டாப்சி. அப்படத்தில் ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக நடித்திருந்தார் டாப்சி. அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன. ஆடுகளம் படத்தின் வெற்றிக்கு பின்னர் தெலுங்கில் பிசியான டாப்சி, தமிழில் அவ்வப்போது மட்டும் நடித்து வந்தார். தமிழில் இவர் நடிப்பில் வெளியான ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற டாப்சி அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். பாலிவுட்டில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து தொடர்ந்து வெற்றியை ருசித்த டாப்சி தற்போது டாப் நடிகையாக உயர்ந்துவிட்டார். நடிகை டாப்ஸிக்கு தற்போது 35 வயது ஆகிறது. இருந்தும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்துகொண்டு வரும் இவர், சமீபத்தில் சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
இதையும் படியுங்கள்... அரசியல் கட்சி துவங்க நாள் குறித்த விஜய்! தேதி குறித்து வெளியான தகவல்? கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்!
அப்போது ரசிகர் ஒருவர் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். இதற்கு டாப்சி அளித்த பதில் தான் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறி உள்ளது. அதன்படி, நான் இன்னும் கர்ப்பமாகவில்லை. அதனால் இப்போதைக்கு திருமணதிற்கு வாய்ப்பில்லை” என கூறி இருக்கிறார். கர்ப்பமான பின்னர் தான் திருமணம் செய்துகொள்வேன் என டாப்சி கூறி உள்ளது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
Taapsee Pannu
டாப்சியின் இந்த பதிலுக்கு பின்னணியில் உள்குத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. பாலிவுட்டில் திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாகும் பிரபலங்களை கிண்டலடிக்கும் விதமாக தான் டாப்சி இப்படி ஒரு கருத்தை தெரிவித்துள்ளதாக கருதப்படுகிறது. பாலிவுட் நடிகை ஆலியா பட் திருமணத்துக்கு முன்னரே கர்ப்பமானார். அதேபோல் நடிகை இலியானா, திருமணம் செய்துகொள்ளாமலே கர்ப்பமானார். இவர்களையெல்லாம் விமர்சிக்கவே டாப்சி இப்படி ஒரு கருத்தை சொல்லி உள்ளதாக நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... நடிப்புக்கு பிரேக்... ஈஷா மையத்தில் பூரண ஆரோக்கியத்திற்காக தியான நிலையில் சமந்தா! வைரல் போட்டோஸ்!