ஆஸ்கர் விருதுக்கு போகும் நானியின் `ஷ்யாம் சிங்கா ராய்'!
ஷியாம் சிங்க ராய் பின்னர் நெட்ஃபிக்ஸில் திரையிடப்பட்டு அதிக மதிப்பீடுகளையும் பெற்று பத்து வாரங்களில் சிறந்த ட்ரெண்டிங் படங்களில் ஒன்றானது.
Shyam Singha Roy
நானி மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான படம் தான் ஷியாம் சிங்க ராய். இந்த படம் மூன்று வெவ்வேறு பிரிவுகளில் ஆஸ்கார் போட்டியில் இடம் பெற்றுள்ளது. ஷியாம் சிங்க ராய் ஆஸ்கார் விருதுக்காண பரிந்துரைகளில் பீரியாடிக் படம், பின்னணி இசை மற்றும் கிளாசிக்கல் கலாச்சார நடன இந்தி படம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆஸ்கார் விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
Shyam Singha Roy
கோவிட்-19 காலத்தில் வெளியான நானியின் காவிய காதல் கதை பிளாக்பஸ்டர் அடித்தது. இப்படம் 1970களில் கொல்கத்தாவில் நடக்கும் திரைக்கதையாக சித்தரிக்கப்பட்டிருந்தது. நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்டின் கீழ் வெங்கட் போயனபள்ளி இந்த படத்தை தயாரித்தார்.
மேலும் செய்திகளுக்கு...54 வயதில் திருமணமா? பெண் பார்க்கிறார்களா குடும்பத்தினர்... எஸ்.ஜே.சூர்யா போட்டுடைத்த உண்மை!
Shyam Singha Roy
இதில் கிருத்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் மற்றும் ராகுல் ரவீந்திரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இதன் பிளாஷ்பேக் காட்சிகளில் தங்கள் விதிவிலக்கான திறமையை காட்டி பார்வையாளர்களை மயக்கி விட்டனர் நானியும், சாய் பல்லவியும்.
மேலும் செய்திகளுக்கு.. இவள் பெண்ணா.. அல்ல தேவதையா.. வழவழப்பான உடையில் மெல்லிய இடையை லைட்டாக காட்டிய அதிதி ஷங்கர்! கியூட் போட்டோஸ்..!
Shyam Singha Roy
அதிக பட்ஜெட்டில் உருவான இதை இயக்குனர் ராகுல் சங்கிரித்யன் இயக்கியிருந்தார். படம் வெளியான பிறகு ஏகோபித்த பாராட்டுகளை பெற்று பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலையும் பெற்றிருந்தது. பின்னர் நெட்ஃபிக்ஸில் திரையிடப்பட்டு அதிக மதிப்பீடுகளையும் பெற்று பத்து வாரங்களில் சிறந்த ட்ரெண்டிங் படங்களில் ஒன்றானது.
மேலும் செய்திகளுக்கு... 5 நாளில் வசூலை அள்ளிய 'விருமன்'..! சூர்யா - கார்த்திக்கு வைரகாப்பை பரிசாக கொடுத்த பிரபலம்.!
Shyam Singha Roy
தற்போது நானி தசரா படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இது தெலுங்கானாவை அடிப்படையாகக் கொண்ட ஒரு பழமையான காதல் கதை என தெரிகிறது. அதேபோல சாய்பல்லவியின் சமீபத்திய கார்கி படம் வெளியாகி மிதமான வெற்றிகளை பெற்றிருந்தது. இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டு இருந்தது.