கல்யாணம் ஆனாலும் திருப்பி ஓடி வந்துருவ... ஜோசியரின் வாக்கால் பிரிந்த காதல் - நளினி சொன்ன ஷாக்கிங் தகவல்
ஜோசியர் சொன்னதால் தானும், ராமராஜனும் மனம் ஒத்து பிரிந்ததாக நடிகை நளினி சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கூறி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நளினி. நடிகர் ராமராஜனை காதலித்து கல்யாணம் செய்துகொண்ட இவர், 13 ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். இவர்கள் இருவருக்கும் விவாகரத்தாகி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும், தற்போது கூட அவரை காதலித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என நடிகை நளினி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கூறி இருந்தார்.
இந்நிலையில், ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்ட நளினி, தானும் ராமராஜனும் பிரிந்ததற்கு ஜோதிடம் ஒரு காரணம் என தமிழா தமிழா நிகழ்ச்சியில் கூறி இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அதில் நளினி கூறியதாவது : “நானும், அவரும் நிறைய ஜோசியம் பார்ப்போம். அப்போது குழந்தைகள் வளர வளர அவரது வாழ்க்கை நிலை குறையும் என ஜோதிடர்கள் சொன்னார்கள். அதைக்கேட்டு அவருக்கு பயம் வந்துடுச்சு.
ramarajan
அப்புறம் நிறைய ஜோசியர்களிடம் கேட்டபோது, உங்கள் குழந்தையை சிவனுக்கு தத்துக்கொடுத்துடுங்கனு சொன்னாங்க. அவங்க சொன்னபடி அவினாசி லிங்கம் கோவிலுக்கு சென்று என் பிள்ளையை தத்துக் கொடுத்தேன். பின்னர் 150 குடம் பாலபிஷேகம் பண்ணி, தவிடு கொடுத்து வாங்கிட்டு வந்தோம். ஆனாலும் எதுவும் மாறவில்லை. ஒரு கட்டத்தில் நான் வேணுமா, உன் பிள்ளைகள் வேணுமானு முடிவு பண்ணிக்கோனு ராமராஜனே கேட்டார்.
இதையும் படியுங்கள்... ஆன்மீக சுற்றுலா ஓவர்... ஃபாரின் ட்ரிப் கிளம்பிய சமந்தா - புது ஹேர்ஸ்டைலில் வெளியிட்ட கலக்கல் கிளிக்ஸ் இதோ
ஏனெனில் நான் தனியா இருந்தா நல்லா இருப்பேன், நீங்க தனியா இருந்தா நல்லா இருப்பீங்க. இல்லேனா பையனை யாரிடமாவது வளர்க்க கொடுத்துவிடலாம்னு சொன்னார். நான் அதெல்லாம் வேண்டாம், நீங்க தனியாவே இருங்க, நான் என் பிள்ளையோடு இருந்துக்கிறேன்னு சொல்லிட்டு என் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு வந்துவிட்டேன். அதன் பின்னர் நாங்கள் நல்லா இருக்கோம். இதுல ஜோசியத்தை தப்பு சொல்ல முடியாது.
இதேபோல் எனக்கு 14 வயது இருக்கும் போது எனக்கு உடம்பெல்லாம் சிரங்கு இருந்ததாம், மருத்துவம் பார்த்தும் குணமடையாததால், ஜோசியரிடம் சென்று கேட்டபோது, அவர் சொன்னது, அவ ரோஜாப்பூ மாதிரி மலரபோரா, விமானத்தில் பறந்து பறந்து வேலை பார்க்க போறா, அவதான் முதல்ல ஜப்பான் கார் வாங்குவானுலாம் சொல்லிருக்காரு. அவர் சொன்னபடியே சினிமாவில் நடித்து பிரபலமாகி முதன்முதலில் நான் தான் ஜப்பான் கார் வாங்கினேன்.
இதையடுத்து ஓம்சக்தி என்கிற படத்தில் நடிக்கும் போது ராஜராஜ சோழன் என்ற சக நடிகர் ஒருவர் என்னுடைய ஜாதகத்தை பார்த்துட்டு, நீ வேணா வேணானு சொன்னாலும் உனக்கு சினிமா சாப்பாடு தான், நீ கல்யாணம் பண்ணிட்டு போனாலும் திருப்பி ஓடி வந்திருவ. நீ ஒளவையார் மாதிரி இதுல தான் நடிக்கனும், நிறைய சாமி வேஷம் போடுவன்னு சொன்னாரு. அதுவே நடக்கவும் செய்தது. அதனால் அவரை நான் நம்பினேன்” என ஜோதிடத்தின் மீது தனக்கு அதீத நம்பிக்கை ஏற்பட்டதன் பின்னணியை நளினி கூறினார்.
இதையும் படியுங்கள்... டைவர்ஸ் ஆனாலும்.. அவரை இன்னும் லவ் பண்ணிட்டு தான் இருக்கேன்! ராமராஜன் மீதான தீராக்காதல் பற்றி மனம்திறந்த நளினி