MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • டைவர்ஸ் ஆனாலும்.. அவரை இன்னும் லவ் பண்ணிட்டு தான் இருக்கேன்! ராமராஜன் மீதான தீராக்காதல் பற்றி மனம்திறந்த நளினி

டைவர்ஸ் ஆனாலும்.. அவரை இன்னும் லவ் பண்ணிட்டு தான் இருக்கேன்! ராமராஜன் மீதான தீராக்காதல் பற்றி மனம்திறந்த நளினி

நடிகர் ராமராஜனை விவகாரத்து செய்து பிரிந்த நிலையிலும் அவரை இன்னும் தான் காதலித்துக் கொண்டு தான் இருக்கிறேன் என நளினி தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 23 2023, 11:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

80ஸ் காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறந்து வந்தவர் நளினி. இவர் நடித்து ஓராண்டில் 24 படங்களெல்லாம் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. அந்த அளவுக்கு பிசியான நடிகையாக வலம் வந்த நளினி, நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு கடந்த 1987-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அருணா, அருண் என இரட்டை குழந்தைகளும் உள்ளன. 

25

காதலித்து திருமணம் செய்துகொண்ட ராமராஜன் - நளினி ஜோடி 13 ஆண்டுகளில் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். ராமராஜானை விவகாரத்து செய்து பிரிந்த பின்னரும், அவரை இன்னும் தான் காதலித்துக் கொண்டு தான் இருக்கிறேன் என நடிகை நளினி சொன்னது காண்போரை நெகிழச் செய்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஸ்டார்ட் மியூசிக் என்கிற ஷோவில் கலந்துகொண்டபோது தான் நடிகை நளினி இந்த தகவலை கூறி இருக்கிறார்.

35

அந்த ஷோவில் கலந்துகொண்ட நளினி, “ஒரு வருஷத்துக்கு 24 படமெல்லாம் நடிச்சிருக்கேன். இது தமிழ்ல மட்டும். இன்னும் தெலுங்கு, மலையாளம், கன்னட படமெல்லாம் இருக்கு என நளினி சொன்னதை கேட்டு ஷாக் ஆன அந்நிகழ்ச்சி தொகுப்பாளினி பிரியங்கா, சாப்பிடறதுலாம் எப்ப மேடம் என கேட்க, இதற்கு நளினி, சாப்பிடவும், தூங்குவதற்காக தான் கல்யாணமே பண்ணினேன் என சொன்னதைக் கேட்டு தன் டிரேட் மார்க் சிரிப்பை சிரித்தார் பிரியங்கா.

இதையும் படியுங்கள்... என்னது குணசேகரனின் மனைவி ஈஸ்வரி ஜீவானந்தத்தின் லவ்வரா? எதிர்நீச்சல் சீரியலில் மிகப்பெரிய டுவிஸ்ட் வெயிட்டிங்

45

இதையடுத்து நளினியிடம் லவ் ஸ்டோரி சொல்லுமாறு கேட்டார் பிரியங்கா. இதன்பின் உற்சாகம் பொங்க தன் லவ் ஸ்டோரியை சொல்ல ஆரம்பித்தார் நளினி. நான் ஓடிப்போற அன்னைக்கு சுரேஷ் அண்ணனுடன் தான் நடிச்சிட்டு இருந்தேன். நான் அவர்கிட்ட போய் அண்ணா நான் ஓடிப் போகப்போறேன்னு சொன்னேன். அதைக் கேட்டு ஷாக் ஆன அவர், அய்யோ ஓடிப்போகாதம்மா உங்க அம்மா என்ன நம்பி தான் உன்ன விட்டுட்டு போயிருக்காங்கனு சொன்னார். உங்க அம்மாவுக்கு போன் பண்ணி சொல்லிடுவேன்னு என்ன பிடிச்சு வச்சிட்டு அண்ணா விடவே இல்லை.

55

பின்னர் லவ் ஸ்டோரி சொல்லிங்கனு பிரியங்கா மீண்டும் கேட்க, அது லவ்வே இல்லயே, யாரப்பார்த்தாலும் ஓடிப்போயிருப்பேன் என காமெடிக்காக சொன்ன நளினி, பின்னர் ராமராஜன் பற்றி பேசுகையில், அவர் நல்ல உழைப்பாளி, பாவம் தெரியாம என்னை லவ் பண்ணிவிட்டார். அதனால நாங்க கல்யாணம் பண்ணவேண்டியது ஆகிடுச்சு. எங்க ரெண்டு பேருக்கும் ஒத்துப் போகல அதனால பிரிஞ்சிட்டோம். ஆனால் இன்னும் அவரை நான் காதலித்துக் கொண்டு தான் இருக்கிறேன். அது அவருக்கும் தெரியும்” என தனது தீராக் காதல் பற்றி பேசி இருந்தார் நளினி. இதைப் பார்த்த ரசிகர்கள் பிரிந்த பின்னரும் அவரை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறீர்களே கிரேட் மேடம் நீங்க என பாராட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... ஏமாத்துறது தப்பில்ல... ஏமாறுறது தான் தப்பு! வைரலாகும் சதீஷின் வித்தைக்காரன் டீசர் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved