தாய் பால் கொடுத்த அனுபவத்தை புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்ட நடிகர் நகுல் மனைவி..!
குழந்தைக்கு ஒரு வயதை கடந்த பின்பு பல தாய்மார்கள், தாய் பால் கொடுப்பதை தவிர்க்கும் காலத்தில், தாய்ப்பாலின் அவசியம் குறித்தும், ஒரு வயதுக்கு பின்பும் தன்னுடைய குழந்தை ஆகீராவுக்கு தாய் பால் கொடுக்க உள்ளதாக கூறி தன்னுடைய கருத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார், நடிகர் நகுல் மனைவி ஸ்ருதி.
“பாய்ஸ்”,“காதலில் விழுந்தேன்” “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்”,“மாசிலாமணி”, “நான் ராஜவாகப் போகிறேன்”, “வல்லினம்” ஆகிய படங்களில் நடித்தவர் நகுல். பிரபல நடிகை தேவயானியின் தம்பியான இவர், நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து, கதாநாயகனாக அறிமுகமானார்.
இந்நிலையில் இவர் கடந்த 2016ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
தற்போது நகுல் - ஸ்ருதி தம்பதினருக்கு கடந்த 1 வயதில் ஆகிரா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.
தன்னுடைய குழந்தைக்கு ஒரு வயது முடிந்துள்ளதை அடுத்து ஒரு வருடம் முழுவதும் குழந்தைக்கு கொடுத்த தாய்ப்பால் கொடுத்த அனுபவங்கள் குறித்து தனது இஸ்டாக்ராம் பக்கத்தில் மிகவும் உருக்கமான வார்த்தைகளால் பகிர்ந்து கொண்டுள்ளார் ஸ்ருதி.
தன்னுடைய மகள் ஆகிரா பிறந்து ஒரு வருடம் முழுவதும் தொடர்ச்சியாக அவருக்கு நான் தாய்ப்பால் கொடுத்து உள்ளேன். எனது கணவர் நகுலும் தனக்கு முழு ஆத்தாவை கொடுத்தார். இருவருமே ஆகிராவை அந்த அளவிற்கு நேசிக்கிறோம் என உருகியுள்ளார்.
குழந்தை பிறந்த சில நாட்கள் தனக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை அதனால் மிகுந்த வேதனை ஏற்பட்டது. ஐந்தாவது நாளில் தாய்ப்பால் சுரந்ததை அடுத்து தொடர்ச்சியாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து வருகிறேன் என்றும், மூன்று மாதங்கள் எப்படி தாய் பால் கொடுப்பது என்பது தெரியாததால் பயந்தேன்... பின்பு முறையாக தாய்ப்பால் கொடுப்பது எப்படி என்பதை பழகி கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதே போல் குழந்தைக்கு பல் முளைக்கும் நாட்களில் தாய் பால் புகட்டுவது சற்று கடினமாகவே இருக்கும், ஆனால் குழந்தை கடிப்பது கூட சுகமான வலி தான் என கூறியுள்ளார்.
இத்துடன் குழந்தைக்கு தாய் பால் கொடுப்பது போன்ற புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இவருக்கு நெட்டிசன்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பதிவும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.