- Home
- Cinema
- சமந்தாவை விட்டு பிரிந்தாலும்... அவருக்காக போட்ட டாட்டூவை அழிக்காதது ஏன்? - நாக சைதன்யா சொன்ன சீக்ரெட்
சமந்தாவை விட்டு பிரிந்தாலும்... அவருக்காக போட்ட டாட்டூவை அழிக்காதது ஏன்? - நாக சைதன்யா சொன்ன சீக்ரெட்
Naga Chaitanya : லால் சிங் சத்தா படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் நாக சைதன்யா அவர் கையில் உள்ள டாட்டூவை அழிக்காதது ஏன் என விளக்கம் அளித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. பிரபல டோலிவுட் ஹீரோ நாகார்ஜுனாவின் மகனான இவர், தற்போது பாலிவுட்டிலும் அறிமுகமாகி உள்ளார். இந்தியில் இவர் நடித்துள்ள முதல் படம் லால் சிங் சத்தா. இப்படத்தில் நடிகர் அமீர்கானின் நண்பனாக, ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நாக சைதன்யா.
இது ஹாலிவுட்டில் வெளியாகி வெற்றிபெற்ற பாரஸ்ட் கோம்ப் என்கிற படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் நாளை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸாக உள்ளது. தமிழில் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்.... 20 வருடங்களுக்கு பின் மீண்டும் ரஜினிகாந்துடன் 'ஜெயிலர்' படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்!
இந்நிலையில், சமீபத்தில் இப்படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் நாக சைதன்யாவிடம் அவர் கையில் உள்ள டாட்டூ பற்றி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், அது தனது திருமண தேதியை குறிக்கும் டாட்டூ என்றும், அது தெரியாமல் எனது ரசிகர்கள் பலர் அதனை காப்பி அடித்து வருகின்றனர். தயவு செய்து அவ்வாறு செய்யாதீர்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.
அதுமட்டுமின்றி அந்த டாட்டூவை அழிக்காதது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த நாக சைதன்யா, அந்த டாட்டூவை அழிக்கும் எண்ணம் இதுநாள் வரைக்கும் எனக்கு வரவில்லை. எதையும் மாற்ற வேண்டாம், அது அப்படியே இருப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என கூறி உள்ளார். நாக சைதன்யாவும், சமந்தாவும் கடந்தாண்டு விவாகரத்து செய்து பிரிந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்.... Vanangaaan : மீண்டும் இயக்குனர் பாலா உடன் மோதலா... வணங்கான் படத்தை நடிகர் சூர்யா கிடப்பில் போட்டது ஏன்?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.