- Home
- Cinema
- திமுக விழாவுக்கு பாட்டு பாட சென்ற பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் ஐசியூவில் அனுமதி... என்ன ஆச்சு?
திமுக விழாவுக்கு பாட்டு பாட சென்ற பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் ஐசியூவில் அனுமதி... என்ன ஆச்சு?
தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தவர் சங்கர் கணேஷ், இவர் தற்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Shankar Ganesh Admitted in ICU
தமிழ் திரையுலகில் கோலோச்சிய இசையமைப்பாளர்களில் சங்கர் கணேஷும் ஒருவர். இவர் தற்போது வயது முதிர்வு காரணமாக சினிமாவில் இசையமைக்காவிட்டாலும், தொடர்ந்து இசைக் கச்சேரிகள் நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் இசை ஜாம்பவான்களான விஸ்வநாதன் - ராமமூர்த்தியிடம் உதவியாளராக பணியாற்றினார். இதையடுத்து கடந்த 1967-ம் ஆண்டு ரிலீஸ் ஆன மகராசி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது எம்ஜிஆர் நடித்த ஆட்டுக்கார அலமேலு திரைப்படம் தான்.
சங்கர் கணேஷ் திரைப்பயணம்
பின்னர் 1980-களில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக கொடிகட்டிப் பறந்தார் சங்கர் கணேஷ். ஊர்க்காவலன், சம்சாரம் அது மின்சாரம், சிதம்பர ரகசியம், சட்டம் ஒரு இருட்டறை, ஆனந்த கண்ணீர், என் ரத்தத்தின் ரத்தமே என 80க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் சங்கர் கணேஷ். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட மொழி படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். வயது முதிர்வு காரணமாக இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால், இசை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
சங்கர் கணேஷுக்கு மூச்சுத்திணறல்
இந்த நிலையில், கரூரில் இன்று நடைபெற இருந்த திமுகவின் முப்பெரும் விழா இன்று கரூரில் நடைபெறுகிறது. இதில் பாடல் பாடுவதற்காக சங்கர் கணேஷுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதை ஏற்று கரூருக்கு இன்று காலை அவர் காரில் கிளம்பிச் செல்லும் வழியில் திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவரை அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஐசியூவில் சிகிச்சை
சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் தான் சங்கர் கணேஷ் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தற்போது அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வழக்கமாகவே ஆக்டிவ் ஆக இருக்கும் நபர் தான் சங்கர் கணேஷ். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.