MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Music : இசைஞானி ஆபிஸில் எடுபுடி வேலை பார்த்தவர்.... இளையராஜாவுக்கே சவால்விடும் இசையமைப்பாளர் ஆன கதை தெரியுமா?

Music : இசைஞானி ஆபிஸில் எடுபுடி வேலை பார்த்தவர்.... இளையராஜாவுக்கே சவால்விடும் இசையமைப்பாளர் ஆன கதை தெரியுமா?

Music Director who working in Ilaiyaraaja Office : இசைஞானி இளையராஜாவின் அலுவலகத்தில் எடுபுடியாக வேலை பார்த்த ஒருவர், பின்னாளில் இசையமைப்பாளராகி பல வெற்றிப்பாடல்களை கொடுத்திருக்கிறார். அவரைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 07 2026, 10:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Music Director who working in Ilaiyaraaja Office
Image Credit : X

Music Director who working in Ilaiyaraaja Office

தமிழ் சினிமாவில் பலர் கடின உழைப்பால் உயர்ந்திருக்கிறார்கள். அந்த பட்டியலில் தனித்துவமான இடம் பிடிப்பவர் இசையமைப்பாளர் பரணி. கையில் வெறும் 85 ரூபாயுடன் சென்னை வந்த இவர், பின்னர் தமிழ் திரையுலகில் வெற்றி பெற்ற இசையமைப்பாளராக மாறியது உண்மையிலேயே ஊக்கமளிக்கும் பயணம். தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பரணி, சிறுவயதிலேயே பெரிய கனவுகளுடன் சென்னை வந்தார். ஆரம்ப நாட்களில் வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருந்ததாக அவர் பல பேட்டிகளில் பகிர்ந்துள்ளார்.

24
பிளாட்பாரத்தில் தங்கிய பரணி
Image Credit : X

பிளாட்பாரத்தில் தங்கிய பரணி

சென்னைக்கு வந்த பின் சில நாட்கள் பிளாட்பாரங்களில் தங்கி வாழ்ந்த அவர், பின்னர் ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வாழ்க்கையை நடத்தினார். அந்த காலகட்டத்திலேயே இசை மீது அவருக்கு இருந்த ஆர்வம் அதிகரித்தது. குறிப்பாக இசைஞானி இளையராஜா அவர்களை சந்தித்து அவருடன் வேலை செய்ய வேண்டும் என்பதே பரணியின் மிகப்பெரிய ஆசையாக இருந்தது. தொடர்ந்து முயற்சி செய்ததன் பலனாக, இளையராஜாவின் அலுவலகத்தில் எடுபுடியாக வேலைக்கு சேரும் வாய்ப்பு பரணிக்கு கிடைத்தது.

Related Articles

Related image1
இளையராஜா போட்ட டியூன்.. கமல் ஆடிய டான்ஸ்! 'புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா' இன்றும் ஹிட் ஏன்?
Related image2
பாட முடியாமல் கதறி அழுத S ஜானகி.! பாதியிலே ரெக்கார்டிங்கை நிறுத்திய இளையராஜா.! ஜானகியை அழ வைத்த வரிகள்.! எந்த பாட்டு தெரியுமா?
34
இசை கற்றுக் கொண்டது எப்படி?
Image Credit : X

இசை கற்றுக் கொண்டது எப்படி?

அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, இசை அமைப்பது, பாடல் உருவாக்குவது, ரெக்கார்டிங் செயல்முறைகள் போன்றவற்றை இளையராஜா டீமில் இருந்த ஒருவர் மூலம் கற்றுக்கொண்டார். முறையான இசைப் பயிற்சி இல்லாவிட்டாலும், அனுபவத்தின் மூலம் இசையைப் புரிந்து கொண்டது தான் அவரின் மிகப்பெரிய பலமாக அமைந்தது. சுமார் ஐந்து ஆண்டுகள் இளையராஜாவுடன் பணியாற்றிய பிறகு, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் கவனத்திற்கு பரணி வந்தார். அப்போது விஜய்யின் அறிமுகப்படமான நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் எழுதும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த அனுபவம் அவரின் திரைப்பயணத்திற்கு முக்கிய திருப்பமாக அமைந்தது.

44
இசையமைப்பாளராக்கிய விஜய் தந்தை
Image Credit : X

இசையமைப்பாளராக்கிய விஜய் தந்தை

பின்னர் பெரியண்ணா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்போது அவரின் இயற்பெயரான குணசேகரனுக்கு பதிலாக “பரணி” என்ற பெயரை எஸ்.ஏ. சந்திரசேகர் வைத்ததாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இடம்பெற்ற “நிலவே நிலவே” போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றன. ஆனால் பரணிக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்த படம் பார்வை ஒன்றே போதுமே தான். குணால், மோனல் மற்றும் கரண் நடித்த இந்த படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. “மழைத்துளி”, “திருடிய இதயத்தை”, “திரும்ப திரும்ப” உள்ளிட்ட பாடல்கள் அந்த காலகட்டத்தில் இளைஞர்களின் விருப்பப்பட்ட பாடல்களாக மாறின.

ஃபீல்டு அவுட் ஆன பரணி

அதனைத் தொடர்ந்து சார்லி சாப்ளின், பேசாத கண்ணும் பேசுமே மற்றும் சுந்தரா டிராவல்ஸ் போன்ற படங்களுக்கு இசையமைத்து கவனம் பெற்றார். சுமார் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள பரணி, தனது முயற்சி மற்றும் அனுபவத்தின் மூலம் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கினார். சமீப காலமாக திரைப்பட வாய்ப்புகள் குறைந்திருந்தாலும், அவர் இசையமைத்த பாடல்கள் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளன. இன்னும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் இசையில் பல சாதனைகள் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
இளையராஜா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : அடிபொலி ட்விஸ்ட்... விஜயா வீட்டை சீல் வைக்க வந்த சிந்தாமணிக்கு செம நோஸ் கட்..!
Recommended image2
Now Playing
Vijay - Trisha | சீனியர் விஜய்... ஜூனியர் த்ரிஷா..! இருவருக்கும் வயசு வித்தியாசம் இவ்வளவா?
Recommended image3
Vijay - Trisha : சீனியர் விஜய்... ஜூனியர் த்ரிஷா..! இருவருக்கும் வயசு வித்தியாசம் இவ்வளவா?
Related Stories
Recommended image1
இளையராஜா போட்ட டியூன்.. கமல் ஆடிய டான்ஸ்! 'புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா' இன்றும் ஹிட் ஏன்?
Recommended image2
பாட முடியாமல் கதறி அழுத S ஜானகி.! பாதியிலே ரெக்கார்டிங்கை நிறுத்திய இளையராஜா.! ஜானகியை அழ வைத்த வரிகள்.! எந்த பாட்டு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved