லதா மங்கேஸ்கரே பாடுவது கஷ்டம்னு சொன்ன பாட்டு.. தமிழ் பாடகியை வைத்து மாஸ் காட்டிய MSV - எந்த பாடல் தெரியுமா?
M.S Viswanathan : தமிழ் திரையுலகை பொறுத்தவரை எந்த காலத்திலும் யாராலும் மறக்கமுடியாத ஒரு இசையமைப்பாளர் தான் எம்.எஸ்.விஸ்வநாதன்.
MS viswanathan movies
கேரளாவில் பிறந்து, தனது ஆசான் சுப்பையா நாயுடு அவர்களிடம் இசை கற்று, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழியில் 800க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த மாமேதை தான் விஸ்வநாதன். குடும்ப சூழல் காரணமாக திரைப்படங்களில் நடிகனாகவும், பாடகராகவும் மாறிவிட்டால், தன்னால் பெரிய அளவில் பொருளீட்டி விட முடியும் என்று நம்பி, அதற்கான வாய்ப்புகளை தேடி அலைந்து, இறுதியில் தோற்றுப் போனவர் தான் எம்.எஸ் விஸ்வநாதன்.
1928ம் ஆண்டு பிறந்த விஸ்வநாதன் தனது பனிரெண்டாவது வயதிலேயே நடிப்பு துறை மேல் ஆர்வம் கொண்டு, அதற்கான பணிகளை செய்து வந்தார். ஒரு சில மேடை நாடகங்களிலும் அவர் நடித்தார். அப்போது தான் டி.ஆர் பாப்பா என்கின்ற வயலின் வித்வானை சந்திக்கும் வாய்ப்பு விஸ்வநாதனுக்கு கிடைத்தது. பாப்பா என்கின்ற அந்த வயலின் கருவி கலைஞர் மூலம் தான், கடந்த 1942ம் ஆண்டு பிரபல எஸ்.வி வெங்கட்ராமனின் இசைக்குழுவில் பணியாற்றும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. மெல்ல மெல்ல இசை வாத்தியங்கள் கற்றுக்கொள்ள தொடங்கினார் விஸ்வநாதன்.
"ஜனநாயகத்தை காக்க கையில் தீப்பந்தம் ஏந்தும் தளபதி" - ரிலீஸ் தேதியுடன் வெளியான தளபதி 69 அப்டேட்!
Musician MSV
அதன் பிறகு எஸ்.எம் சுப்பையா நாயுடுவை தனது குருவாக ஏற்றுக்கொண்டு தனக்கு நடிப்பு மற்றும் பாடலை காட்டிலும், இசையின் மீது அதிக ஆர்வம் இருப்பதை உணர்ந்து, அந்த பாதையில் பயணிக்க தொடங்கினார். 1952ம் ஆண்டு தமிழில் வெளியான கலைஞர் கருணாநிதியின் "பணம்" என்கின்ற திரைப்படத்தில், டி.கே ராமமூர்த்தியுடன் இணைந்து தனது கலை உலக பயணத்தை இசையமைப்பாளராக தொடங்கினார் விஸ்வநாதன். தொடர்ச்சியாக 1965ம் ஆண்டு வரை டி.கே ராமமூர்த்தியுடன் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இசையமைத்து வந்த எம்.எஸ்.வி, அவர்களிடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அதன் பிறகு தனியே இசையமைக்க தொடங்கினார்.
அவர் திரையுலகில் அறிமுகமான பதினைந்தாவது ஆண்டில் தனது 125வது திரைப்படத்திற்கு இசை அமைத்து முடித்த அவர், அடுத்த பத்து ஆண்டுகளில் தனது 325வது திரைப்படத்திற்கான இசையை அமைந்ததே அவர் திறமைக்கு கிடைத்த பரிசு. எம்.எஸ் விஸ்வநாதன் தன்னுடைய வாழ்நாளில் 800க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
vijay with msv
மிகப்பெரிய இசையமைப்பாளராக வலம் வந்த விஸ்வநாதன், எஸ்.பி பாலசுப்பிரமணியம், ஜானகி, கவிஞர் வாலி போன்ற பலருடைய வாழ்க்கையில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த மேடையில் கவிஞர் வாலி பேசத் தொடங்கினாலும், தன்னுடைய இந்த வாழ்க்கை எம்.எஸ் விஸ்வநாதன் அவர்கள் இட்ட பிச்சை என்று பெருமையோடு கூறித்தான் தனது உரையை தொடங்குவார். அந்த அளவிற்கு பல நூறு பாடல்களை வாலியோடு இணைந்து இசையமைத்து அசத்தியவர் எம்.எஸ்,வி.
அதுமட்டுமல்ல தமிழ் திரையுலகத்திற்கு மிகச்சிறந்த பல பாடகர்களை அறிமுகமும் செய்து வைத்திருக்கிறார் அவர். அப்படி அவருடைய இசையில் உருவான ஒரு திரைப்படத்தின் பாடல், 55 ஆண்டுகள் கடந்தும் இப்போது வரை ஒளிர்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் அந்த பாடலில் இடம்பெற்ற அந்த பாடகியின் குரல் தான்.
LR eswari
கடந்த 1969ம் ஆண்டு பிரபல இயக்குனர் சி.வி ஸ்ரீதர் இயக்கத்தில் எம்,எஸ் விஸ்வநாதன் இசையில் உருவான திரைப்படம் தான் "சிவந்த மண்". சிவாஜி கணேசன், எம்.என் நம்பியார், காஞ்சனா, நாகேஷ் உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் நடித்து அசத்தியிருப்பார்கள். இந்த திரைப்படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியது கண்ணதாசன் தான். குறிப்பாக "பட்டத்து ராணி பார்க்கும் பார்வை" என்கின்ற பாடலுக்கான மெட்டும், அந்த பாடல் வரிகளும் அமைக்கப்பட்ட பிறகு, அந்த பாடலை யார் பாடுவது என்கின்ற கேள்வி எழுந்தது.
அதற்காக பல முன்னணி பாடகிகளை அணுகியுள்ளார் எம்.எஸ் விஸ்வநாதன், ஒரு கட்டத்தில் பிரபல பாடகி லதா மங்கேஷ்கரே அந்த மெட்டையும், வரிகளையும் கேட்டுவிட்டு, அய்யயோ என்னால் இதை பாடமுடியாது என்று கூற, அதன் பிறகு இங்க வாம்மா என்று எல்.ஆர். ஈஸ்வரியை அழைத்து அந்த பாடலை பாடச்சொல்லியுள்ளார் MSV. அந்த பாடல் வெளியாகி 55 ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனால் இப்பொது கூட அந்த பாடலை யாரும் அவ்வளவு நேர்த்தியாக பாடிவிடமுடியாது. அப்படி ஒரு மெகா சம்பவத்தை செய்த லெஜெண்ட் தான் விஸ்வநாதன்.
"வித்அவுட் மேக்அப்.. Rugged லுக்கில் மிரட்டப்போறேன்" அடுத்த படம் பற்றி பேசிய "லெஜெண்ட்"!