"ஜனநாயகத்தை காக்க கையில் தீப்பந்தம் ஏந்தும் தளபதி" - ரிலீஸ் தேதியுடன் வெளியான தளபதி 69 அப்டேட்!
Thalapathy 69 : பிரபல இயக்குனர் வினோத் இயக்கத்தில், அனிருத் இசையில் தளபதி விஜயின் இறுதி திரைப்படமான அவரது 69வது திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
GOAT Movie
கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி தளபதி விஜயின் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படம் வெளியாகி உலக அளவில் 300 கோடி ரூபாயையும் தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது. பல முன்னணி நடிகர்களுடைய அசத்தலான நடிப்பில் உருவான "கோட்" திரைப்படம், தனது இரண்டாவது வார பயணத்தில் இருக்கின்ற நிலையிலும், மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்த சூழலில் தளபதி விஜயின் 69வது மற்றும், இறுதி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்பொழுது வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தோடு தனது சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தளபதி விஜய், இனி முழுநேர அரசியல் தலைவராக பயணிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செப்டம்பர் மாத இறுதியில் விக்ரவாண்டியில் நடக்கும் தனது தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். அதன் பிறகு தனது 69வது பட பணிகளை துவங்கவுள்ளார்.
"வித்அவுட் மேக்அப்.. Rugged லுக்கில் மிரட்டப்போறேன்" அடுத்த படம் பற்றி பேசிய "லெஜெண்ட்"!
Thalapathy 69
தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகமாகும் கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் தளபதி விஜய் நடிக்க உள்ளார். ஜனநாயகத்தை காக்க தீப்பந்தம் ஏந்தி தளபதி விஜய் வருவது போல இந்த திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில், அனிருத் திசையில் உருவாகவுள்ள இந்த திரைப்படம் எதிர்வரும் 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விரைவில் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சரியாக இந்த திரைப்படம் வெளியாக ஓராண்டு காலம் இருக்கிறது என்பதால், தளபதி விஜய் வைத்து மிக நேர்த்தியாக இந்த திரைப்படத்தை உருவாக்க எச் வினோத் முனைந்திருக்கிறார் என்பது இதன் மூலம் தெரிகிறது.
KVN Production
கடந்த 2021ம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான "சகத்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகில் களமிறங்கிய தயாரிப்பு நிறுவனம் தான் கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ். தெலுங்கு மொழியில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி ஆஸ்கர் வரை சென்ற ராஜமௌலியின், RRR திரைப்படத்தை தயாரித்ததும் இந்த நிறுவனம் தான். தொடர்ச்சியாக கன்னடம் மற்றும் தெலுங்கு மொழியில் கடந்த மூன்று ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்து புகழ்பெற்ற இந்த நிறுவனம் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தையும் தயாரித்துள்ளது.
ஆனால் கங்குவா படத்தை பொறுத்தவரை ஸ்டூடியோ கிறீன் நிறுவனத்துடன் இணைந்து தான் அந்த நிறுவனம் தயாரித்து வருகின்றது என்பதால், அதிகாரப்பூர்வமாக தமிழில் அந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படமாக மாறி இருக்கிறது தளபதியின் இந்த 69வது படம்.
TVK Vijay
இந்த ஆண்டு துவக்கத்தில் தனது "தமிழக வெற்றிக்கழகம் கட்சி" குறித்து அறிவித்த தளபதி விஜய், தான் ஏற்றுக்கொண்ட இரு திரைப்பட பணிகளை முழுமையாக முடித்த பிறகு, தனது கலை உலக பயணத்திற்கு முற்றிலுமாக "குட் பை" சொல்லிவிட்டு, முழு நேர அரசியல் தலைவராக பயணிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். இது மட்டுமில்லாமல் தனது தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வருக என்ற 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அவர் களமிறங்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஹைக்கூ கவிதை வரிகளால்... வித்யாசாகர் இசையில் உருவான முதல் சூப்பர் ஹிட் பாடல்! எது தெரியுமா?