ரூ. 500 கோடி பட்ஜெட், 9 ஆண்டுகளாக மிரட்டும் ரொம்பவே காஸ்ட்லியான வெப் சீரிஸ்!
Most Costliest OTT Web Series: நெட்ஃபிளிக்ஸின் மிகவும் காஸ்ட்லியான வெப் சீரிஸ் இது. ஏற்கனவே நான்கு சீசன்கள் வெளியாகிவிட்டன. இப்போது ஐந்தாவது சீசனுக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த சீரிஸ் என்ன? அதன் பட்ஜெட் எவ்வளவு? என்பதைப் பார்ப்போம்.

ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்
கிரைம் முதல் ஹாரர் வரை நெட்ஃபிளிக்ஸில் பல கன்டென்ட்கள் உள்ளன. அதில் தனித்துவமானது 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்'. 4 சீசன்கள் ஹிட் அடித்த நிலையில், 5வது சீசனுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதன் பட்ஜெட் ரூ.500 கோடி.
ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் - நெட்ஃபிளிக்ஸ்
2016-ல் தொடங்கிய இது, 9 ஆண்டுகளாகியும் டிரெண்டிங்கில் உள்ளது. சீசன் 5 தயாராகி வருகிறது. ஒரு எபிசோடுக்கு ரூ.5.5 கோடி செலவாகிறது. விஷுவல் எஃபெக்ட்ஸ், 1980-களின் செட்களுக்காக அதிக செலவு செய்யப்படுகிறது.
70th Filmfare Awards 2025 : 13 விருதுகளை வென்ற 'லாபதா லேடீஸ்'; ஆலியா, அபிஷேக், கார்த்திக்!
90-120 நிமிடங்கள் நீளம்
ஒவ்வொரு எபிசோடும் 90-120 நிமிடங்கள் நீளம் கொண்டது. சீசன் 5-ன் மொத்த ரன்டைம் 11 மணி நேரத்திற்கும் அதிகம். முதல் 4 எபிசோடுகள் நவ. 26 அன்றும், அடுத்த 3 எபிசோடுகள் டிச. 25 அன்றும் வெளியாகும்.
இறுதி கிளைமாக்ஸ் எபிசோட்
இறுதி கிளைமாக்ஸ் எபிசோட் டிசம்பர் 31 முதல் நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பாகும். நவம்பர் முதல் டிசம்பர் வரை ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய சினிமா விருந்தாக அமையும். இந்த சீசனும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதி சீசனில் மில்லி பாபி பிரவுன்
இறுதி சீசனில் மில்லி பாபி பிரவுன், ஃபின் வோல்ஃப்ஹார்ட், கேடன் மாதராசோ, காலேப் மெக்லாலின், நோவா ஷ்னாப், வினோனா ரைடர், டேவிட் ஹார்பர், சேடி சிங்க் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
'எதிர்நீச்சல்' சீரியல் ஹீரோயின் பார்வதிக்கு அடித்த ஜாக்பாட்! குவியும் வாழ்த்து!