MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Vijay - Ajith : லண்டனை ஸ்தம்பிக்க வைத்த தல - தளபதி... அஜித்தை பார்த்ததும் ஓடோடி வந்து கட்டிப்பிடித்த விஜய் - வைரலாகும் வீடியோ

Vijay - Ajith : லண்டனை ஸ்தம்பிக்க வைத்த தல - தளபதி... அஜித்தை பார்த்ததும் ஓடோடி வந்து கட்டிப்பிடித்த விஜய் - வைரலாகும் வீடியோ

Ajith - Vijay Meeting : அஜித் கலந்துகொண்டுள்ள கார் பந்தயத்தை தொடங்கி வைப்பதற்காக லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோன் மைதானத்திற்கு சென்ற விஜய், அவரை கட்டிப்பிடித்து நட்பு பாராட்டி உள்ளார்.

3 Min read
Author : Ganesh A
Published : Sep 12 2026, 09:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
லண்டனின் சம்பவம் செய்த தல தளபதி
Image Credit : X

லண்டனின் சம்பவம் செய்த தல - தளபதி

இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் பந்தயத் திடலில் நடைபெறும் மிச்செலின் லே மேன்ஸ் கப் (Michelin Le Mans Cup) கார் பந்தயத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 2026 சாம்பியன்ஷிப்பின் ஐந்தாவது சுற்றான இந்தப் போட்டியில், பிரபல கோலிவுட் நடிகரும் ரேஸருமான அஜித் குமார் களமிறங்கி உள்ளார். இது அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்கள், உலகின் மிக முக்கியமான மோட்டார்ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் சந்தித்துக் கொண்ட தருணம் தான் தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது.

அஜித்தை பார்த்ததும் முதல்வர் விஜய், துள்ளிக் குதித்து ஓடி வந்து கட்டியணைத்து தன் அன்பை வெளிப்படுத்தி உள்ளார். அதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதையடுத்து இருவரும் ஒன்றாக கைகோர்த்தபடி சென்று, இந்த கார் ரேஸை காண குவிந்துள்ள லண்டன் வாழ் தமிழர்களை பார்த்து கையசைத்தனர். இந்த நிகழ்வை பார்ப்பதற்காக அங்கு ஸ்டேடியமே ஹவுஸ்ஃபுல் ஆனது. இதற்காக சுமார் 70 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்த்துள்ளதாம்.

Vijay-Ajith : அஜித்துக்கு பச்சைக் கொடி காட்டும் விஜய்! லண்டன் கார் ரேஸில் காத்திருக்கும் சம்பவம்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சிறப்பு விருந்தினராக வந்துள்ள விஜய்
Image Credit : X

சிறப்பு விருந்தினராக வந்துள்ள விஜய்

முதல்வர் விஜய், இரண்டு மணி நேரம் நடக்கும் இந்தப் பந்தயத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அதே சமயம், அஜித் 'அஜித் ரெடான்ட் பை விராஜ்' அணிக்காகப் பந்தயத்தில் பங்கேற்றிருக்கிறார். தனது வெற்றிகரமான சினிமா பயணத்துடன், மோட்டார்ஸ்போர்ட்ஸ் மீதான தனது ஆர்வத்தையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் அஜித், LMP3 Pro/Am பிரிவில் 'அஜித் ரெடான்ட் பை விராஜ்' அணிக்காகப் போட்டியிடுகிறார். அவர், பிரான்ஸ் நாட்டு வீரர் ரோமெய்ன் வோஸ்னியாக்குடன் இணைந்து எண் 16 கொண்ட லிஜியர் காரை ஓட்டுகிறார்.

பந்தயத்திற்கு முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அஜித், முதல்வர் விஜய்யின் வருகையை வரவேற்றார். மேலும், இதுபோன்ற பெரிய அளவிலான போட்டிகளை இந்தியாவிலும் நடத்த வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் தெரிவித்தார்.

"தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், தனது பிஸியான பணிகளுக்கு நடுவே நேரம் ஒதுக்கி சில்வர்ஸ்டோனுக்கு எங்களைப் பார்க்க வந்திருப்பதற்கு எனது மனமார்ந்த நன்றிகள். நாங்கள் கடந்த 34 ஆண்டுகளாகத் திரையுலகில் சக ஊழியர்களாக இருந்துள்ளோம். அவர் இப்போது முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி," என்று அஜித் கூறினார்.

That run and hug 🫂 ❤️ #AK#CMVijaypic.twitter.com/x7TKRi460Y

— Actor Vijay Fan Page (@ActorVijayFP) September 12, 2026

Related Articles

Related image1
Ajith : ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த அஜித்... ஷாலினி தயாரிப்பில் 2 படங்கள் - ஒன்னு டேர் டெவில்; இன்னொன்னு என்ன?
Related image2
Now Playing
முதல்வர் விஜய் மீது நம்பிக்கை வைத்து வாழ்த்து சொன்ன அஜித் அவர்களுக்கு நன்றி - ராஜ்மோகன் பேட்டி
34
அஜித்தின் விருப்பம்
Image Credit : X

அஜித்தின் விருப்பம்

"அவர்கள் விளையாட்டுகளை ஊக்குவிக்க நிறைய செய்து வருகிறார்கள். எனவே, இந்தியாவிலும் சென்னையிலும் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு என்ன தேவை என்பதைப் பார்க்க வருமாறு நாங்கள் அழைப்பு விடுத்தோம். இந்த நிகழ்வுகள் இந்தியாவுக்கு வர வேண்டும் என்பதே எனது விருப்பம்," என்றும் அவர் தெரிவித்தார். சில்வர்ஸ்டோனில் நடக்கும் இந்தப் பந்தயத்தில் அஜித் மட்டுமல்லாமல், முன்னாள் ஃபார்முலா ஒன் வீரர் நரேன் கார்த்திகேயன் மற்றும் ஆதித்யா படேல் ஆகியோரும் இந்தியாவிலிருந்து கலந்துகொள்கின்றனர்.

இந்தப் பந்தயம், 5.891 கிலோமீட்டர் நீளமுள்ள கிராண்ட் பிரிக்ஸ் சர்க்யூட்டில் இரண்டு மணி நேரம் நடைபெறும். இது 2026 மிச்செலின் லே மேன்ஸ் கப் சீசனின் ஐந்தாவது சுற்றாகும். இதன் இறுதிச்சுற்று அக்டோபர் மாதம் போர்ச்சுகலில் உள்ள போர்டிமாவ் நகரில் நடைபெற உள்ளது. மிச்செலின் லே மேன்ஸ் கப் என்பது ஒரு என்டியூரன்ஸ் ரேசிங் சாம்பியன்ஷிப் ஆகும். இதில் LMP3, LMP3 Pro/Am மற்றும் GT3 போன்ற பிரிவுகள் உள்ளன. ஃபார்முலா ஒன் பந்தயத்தில் ஓட்டுநர்கள் தனியாகப் போட்டியிடுவதைப் போல இல்லாமல், இந்த என்டியூரன்ஸ் பந்தயத்தில், ஒரு காரை பல ஓட்டுநர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குப் பகிர்ந்து ஓட்டுவார்கள்.

44
முதல்வரின் லண்டன் விசிட் ஏன்?
Image Credit : X

முதல்வரின் லண்டன் விசிட் ஏன்?

அஜித், 2026 சீசனுக்காக இந்த சாம்பியன்ஷிப்பில் இணைந்து, LMP3 Pro/Am பிரிவில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட Le Mans Prototype காரில் போட்டியிடுகிறார். தமிழ்நாட்டில் மோட்டார்ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகள் நடந்து வரும் சூழலில், முதல்வர் விஜய்யின் இந்த சில்வர்ஸ்டோன் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் மேம்பட்ட உற்பத்தி, எலக்ட்ரிக் வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூட்டாண்மைகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு, முதல்வர் தற்போது ஒரு வார பயணமாக இங்கிலாந்துக்குச் சென்றுள்ளார்.

Ajith - Vijay : நண்பர் விஜய்-க்கு நன்றி சொல்லி அறிக்கை வெளியிட்ட அஜித் - எதுக்காக தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அஜித் குமார்
விஜய் (நடிகர்)
தளபதி விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Namitha: தாலி, பொட்டு எல்லாம் பொண்ணுங்களுக்கு மட்டும்தானா? ஆண்களுக்கு ஏன் இல்லை? - நமிதா கேள்வியால் வெடித்த சர்ச்சை
Recommended image2
Sardar 2 vs Mandaadi : பாக்ஸ் ஆபிஸில் சர்தார் 2-க்கு சம்மட்டி அடி கொடுத்த மண்டாடி... வசூலில் கிங் ஆக மாறிய சூரி!
Recommended image3
Solomon Pappaiya : ஒரே ஒரு காமெடி சீனால் சினிமாவே வேண்டாம் என தூக்கியெறிந்த சாலமன் பாப்பையா - பலரும் அறிந்திடாத தகவல்
Related Stories
Recommended image1
Ajith : ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த அஜித்... ஷாலினி தயாரிப்பில் 2 படங்கள் - ஒன்னு டேர் டெவில்; இன்னொன்னு என்ன?
Recommended image2
Now Playing
முதல்வர் விஜய் மீது நம்பிக்கை வைத்து வாழ்த்து சொன்ன அஜித் அவர்களுக்கு நன்றி - ராஜ்மோகன் பேட்டி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved