ஜெயிலர் 2வில் இணையும் பாலிவுட் நடிகர்.. அப்போ 1000 கோடி வசூல் கன்பார்ம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜூனா நடிப்பில் வெளியாகி வசூலில் சக்கைப்போடு போட்டு வருகிறது கூலி. இந்த நிலையில் ரஜினியின் ஜெயிலர் 2 பட அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

ஜெயிலர் 2 அப்டேட்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனை படைத்தது, உலகளவில் சுமார் ரூ.650 கோடி வசூலித்தது. அந்த வெற்றியின் தொடர்ச்சியாக உருவாகும் ‘ஜெயிலர் 2’ மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு மிகப்பெரிதாக இருக்கிறது என்றே கூறலாம். ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.
ரஜினிகாந்த்
மேலும், இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் சிறப்பு தோற்றத்தில் பங்கேற்றுள்ளனர். ஜெயிலர் படத்தின் முந்தைய பாகத்தில் இவர்கள் நடித்திருந்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. முந்தைய பாகத்தை விட, 2ம் பாகம் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறது.
ஜெயிலர் 2 புதிய நடிகர்
ரஜினிகாந்த் தற்போது படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், சமீபத்தில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பிறந்தநாளில் பங்கேற்ற குழுவினர் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். சன் பிக்சர்ஸ் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி, அதில் ரஜினி நெல்சனுக்கு மலர்க்கொத்து அளித்து, கேக் ஊட்டும் காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
பாலிவுட் ஹீரோ
இதே நேரத்தில், ஷாருக் கான் படத்தில் கேமியோவாக நடிக்கிறார் என்ற வதந்தி பரவியிருந்தது. ஆனால், Box Office South India அதை மறுத்து, ஷாருக் கான் படத்தில் எந்த வகையிலும் தொடர்பு இல்லை என்று தெளிவுபடுத்தியது. இதனால், ரசிகர்கள் உண்மையான அப்டேட்களுக்கு காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.
மிதுன் சக்கரவர்த்தி
இதற்கிடையில், பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் மிதுன் சக்கரவர்த்தி இந்த படத்தில் இணைந்துள்ளார் என்ற செய்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா டுடே வெளியிட்ட தகவலின் படி, அவர் வரும் வாரமே படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும், கேமியோ அல்லாது முழுமையான கதாபாத்திரத்தில் தோன்றுவார் என்றும் கூறியுள்ளனர்.இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் ட்ரெண்டிங்காக மாறியுள்ளது.