MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இந்த வாரம் புஷ்பா 2-வை காலி பண்ண களம் இறங்கும் 7 திரைப்படங்கள்! என்னென்ன தெரியுமா?

இந்த வாரம் புஷ்பா 2-வை காலி பண்ண களம் இறங்கும் 7 திரைப்படங்கள்! என்னென்ன தெரியுமா?

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் வித்தியாசமான கதைகளும் கொண்ட பல படங்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த வாரம் மொத்தம் ஏழு படங்கள் வெளியாக உள்ளது. அப்படி இந்த வாரம் வெளியாகும் படங்கள் என்னென்ன என்பதையும் இந்த படங்கள் புஷ்பா 2 வசூலை பாதிக்குமா? என்பதையும் பார்ப்போம். 

3 Min read
manimegalai a
Published : Dec 13 2024, 12:55 PM IST| Updated : Dec 13 2024, 01:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Once Upon A Time In Madras

Once Upon A Time In Madras

ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் மெட்ராஸ்:

நடிகர் பரத் நடிப்பில், இந்த வாரம் வெளியாக உள்ள திரைப்படம் 'ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்'. ஒன்பது வயது சிறுவன் சுட்டு கொல்லப்படுகிறான். இது குறித்து போலீசார் விசாரணை செய்யும் போது, அந்த சிறுவன் சுடப்பட்ட துப்பாக்கி கிடைக்க, அதைப்பற்றி மேலும் போலீசார் விசாரணை நடத்தும் போது தெரியவரும் அதிர்ச்சி உண்மைகளை பின்னணியாகக் கொண்டது இந்த திரைப்படம்.

இந்த படத்தில் பரத் ஹீரோவாக நடிக்க, அபிராமி கோபிகுமார், அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி, பி ஜி எஸ் குமார், தலைவாசல் விஜய், கனிகா, போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரசாத் முருகேசன் இந்த படத்தை இயக்கி உள்ளார். விறுவிறுப்பான கதைக்களம் கொண்ட இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

27
Miss You

Miss You

மிஸ் யூ:

நடிகர் சித்தார்த் 'சித்தா' படத்தை தொடர்ந்து நடித்துள்ள ரொமான்டிக் திரைப்படம் 'மிஸ் யூ' இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ளார். பிரச்சனையால் பிரியும் காதல் ஜோடி, தங்களின் காதல் தருணத்தை எந்த அளவுக்கு தவற விடுகின்றனர் என்பதே இந்த படத்தின் கதைக்களம். இந்த படத்தில் கருணாகரன், பால சரவணன், லொள்ளு சபா மாறன், சஷ்டிகா, உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை என் ராஜசேகர் என்பவர் இயக்க, சாமுவேல் மாத்தியூஸ் தயாரித்துள்ளார். ஜிப்ரன்  இசையமைத்துள்ள இந்த திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் சித்தார்த் காதல் கதையில் நடித்துள்ள ரொமான்டிக் திரைப்படம் இது என்பதால் படம் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.

எதிர்நீச்சல் 2 சீரியலில் அதிரடியாக மாற்றப்படும் புதிய குணசேகரன் இவரா? வேற லெவல் செலக்ஷன்!

37
Soodhu Kavvum 2

Soodhu Kavvum 2

சூது கவ்வும் 2:

விஜய் சேதுபதி நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக உருவாக்கியுள்ளது சூது கவ்வும் 2. டார்க் காமெடி பாணியில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை 'சூது கவ்வும் 2 நாடும் நாட்டு மக்களும்' என்கிற பெயரில் இயக்குனர் எம் எஸ் அர்ஜுனன் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு பதிலாக மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்க, ரமேஷ் திலக், கருணாகரன், எம் எஸ் பாஸ்கர், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் டிசம்பர் 13 ஆம் தேதியான, இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது.

47
Then Chennai

Then Chennai

தென் சென்னை:

தென் சென்னை என்கிற பெயரில், இன்று இயக்குனர் ரங்க நாதன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படத்தில் இயக்குனர் ரங்க நாதன் கதாநாயகனாக நடிக்க, ரியா முருகன் என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். சஸ்பென்ஸ் திரில்லர் கிரைம் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தில், இரண்டு கேங்குக்கு இடையே நடக்கும் சண்டையை மையமாக வைத்து, எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

'மகாராஜா' பட நடிகர் மகள் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட நாக சைதன்யா - சோபிதா! போட்டோஸ்!
 

57
Vidinja Enakku Kalyaanam

Vidinja Enakku Kalyaanam

விடிஞ்சா எனக்கு கல்யாணம்:

இந்த வாரம் டிசம்பர் 13-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் சிறிய பட்ஜெட் படங்களில் ஒன்று 'விடிஞ்சா எனக்கு கல்யாணம்'. இயக்குனர் எஸ் பி பகவதி பாலா இயக்கத்தில் உருவாகி உள்ள, இந்த படத்தை எஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தன்னுடைய நான்காவது திரைப்படமாக தயாரித்துள்ளது.  இப்படத்தின் இயக்குனரான பகவதி பாலா மற்றும் ஷாஹில் இருவரும் கதாநாயகனாக நடிக்க, யூகிதா - சினேகா ஸ்ரீ ஆகியோர் கதாநாயகியாக நடித்துள்ளனர்.

மேலும் ஏராளமான திரைப்படங்களை இயக்கியும், நடித்தும் உள்ள ஆர்.சுந்தர்ராஜன் வித்தியாசமான நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார். இவர்களை தவிர கேபிள் சேகர், பார்த்திபன், ஆல்வின், வாழை பட நடிகை ஜானகி, போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் உருவாக்கி இருக்கும் இந்த திரைப்படம், இன்றைய தினம் வெளியாகிறது.
 

67
Thalapathy (Re-release)

Thalapathy (Re-release)

தளபதி ரிலீஸ்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ,தீபாவளி முன்னிட்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற தளபதி திரைப்படம்...  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இன்றைய தினம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படம் மகாபாரத கதையில் வரும் கர்ணன் மற்றும் துரியோதனன் இடையே உள்ள நட்பை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். 'தளபதி' இன்று டிஜிட்டல் முறையில் ரீலீஸ் செய்யப்படுகிறது. 

ஆண்டாளாக வந்து ஆண்டனிக்கு கழுத்தை நீட்டிய கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்

77
Andha Naal

Andha Naal

அந்த நாள்:

இயக்குனர் கதிரேசன் இயக்கத்தில் ஆரியன், பிரசாத், லிமாபாபு, மற்றும் கிஷோர் ராஜ்குமார் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ஹாரர் திரைப்படம் 'அந்த நாள்'. இந்த படத்திற்கு ராபர்ட் சற்குணம் இசையமைத்துள்ளார்.  இப்படம் எடுத்து முடிக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்குபின்னரே தற்போது வெளியாக உள்ளது.

ஒரு இயக்குனர், அவருடைய உதவியாளர் மற்றும் சமையல்காரர் ஆகியோர் ஒரு அரண்மனைக்கு சென்று திரைப்படம் குறித்து விவாதிக்க நினைக்கும் நிலையில், ஒரு முகமூடி அணிந்த மாயக்காரன் கையில் சிக்குகிறார்கள். பின்னர் அந்த பங்களா ஒரு பேய் பங்களா என்பதை அறிகின்றனர். ஒரு பெண்ணின் குரல் அந்த பங்களாவை சுற்றி ஒலிக்கும் நிலையில், அந்த பங்களாவில் இருந்து மூவரும் தப்பிக்க முயல்கின்றனர். பின்னர் அந்த பெண்ணின் குரல் மற்றும் அந்த மாஸ்க் அணிந்த மாயக்காரன் பற்றிய பின்னணி மெல்ல மெல்ல வெளியே கொண்டுவரப்படுகிறது. இதுவரை திரைக்கதைகள் சொல்லப்படாத புதுவிதமான அனுபவமாக இந்த திரைப்படம் இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved