Sathyaraj Mother Death: சத்யராஜின் தாயார் உடலுக்கு அமைச்சர் சேகர் பாபு அஞ்சலி!
வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்த நடிகர் சத்தியராஜ் தாயாரின் உடலுக்கு அமைச்சர் சேகர்பாபு மற்றும் அரசியல் கட்சியினர் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து பின்னர் ஹீரோவாக மாறியவர் நடிகர் சத்யராஜ். கடந்த சில வருடங்களாக, தொடர்ந்து வலுவான குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவரின் தாயார் நாதாம்பாள் நேற்று மாலை 4 மணியளவில் உயிரிழந்தார்.
94 வயதாகும் இவர், வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், திடீர் என ஏற்பட்ட இதய பிரச்சனை காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுபாதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சினிமாவில் 64 ஆண்டுகள்..! வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி! கமல்ஹாசன் ட்வீட்!
தாயார் இறப்பு செய்தி அறிந்து, ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த சத்யராஜ், தன்னுடைய மகன் சிபிராஜுடன் நேற்று இரவே கோவை வந்தடைந்தார். தற்போது நாதாம்பாள் உடல் கோவை பந்தையசாலை பகுதியிலுள்ள,சத்தியராஜ் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இவரின் இறுதி சடங்கு நாளை நடைபெற உள்ள நிலையில், தற்போது இவரின் உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில், அமைச்சர் சேகர் பாபு மற்றும் திமுக கட்சியை சேர்த்தவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
ரம்யா பாண்டியன் தங்கையோடு நடிகர் அசோக் செல்வனுக்கு திருமணமா? சமூக வலைத்தளத்தில் சூடாக்கிய தகவல்!