சினிமாவில் 64 ஆண்டுகள்..! வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி! கமல்ஹாசன் ட்வீட்!

உலக நாயகன் கமலஹாசன், திரையுலகில் காலடி எடுத்து வைத்து 63 ஆண்டுகள் நிறைவடைந்து,  64 ஆவது ஆண்டு பயணத்தை துவங்கி உள்ளார். இந்நிலையில் தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்.
 

64 years of cinema Kamal Haasan tweeted thanking for the wishes

திரையுலகில் பலர் வந்த வேகத்தில், காணாமல் போகும் நிலையில் 60 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளார் கமல்ஹாசன். இதற்க்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் தான். 150 ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த படம் சுமார் 450 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் இப்படம் கவர்ந்தது.

கமல்ஹாசன் தன்னுடைய நான்கு வயதில், களத்தூர் கண்ணம்மா என்கிற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய கலை பணியை துவங்கி, முதல் படத்திற்கே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை ஜனாதிபதி கைகளால் பெற்றார். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர்,  கே பாலச்சந்தர் இயக்கத்தில் கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்தார். அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து, இவர் நடித்த மூன்று முடிச்சி, அவர்கள், 16 வயதினிலே, ராஜ பார்வை,  போன்ற படங்கள் இப்போது வரை ரசிகர்களால் ரசிக்க கூடிய படங்களாக உள்ளன. 

64 years of cinema Kamal Haasan tweeted thanking for the wishes

ரம்யா பாண்டியன் தங்கையோடு நடிகர் அசோக் செல்வனுக்கு திருமணமா? சமூக வலைத்தளத்தில் சூடாக்கிய தகவல்!

நடிகர் என்பதைத் தாண்டி கமல்ஹாசன் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், நடன இயக்குனர், என திரையுலகில் பன்முக திறமையை வெளிப்படுத்தி உள்ளார். அதுமட்டுமின்றி கதைக்காகவும், கதாபாத்திரத்திற்காகவும், எந்த அளவிற்கு ரிஸ்க் எடுத்து நடிக்க கூடிய மகா கலைஞன். இவரை சுற்றி எத்தனையோ விமர்சனங்கள் எதிர் கொண்டு வந்த போதும்  அவை அனைத்தையும் தூசி போல் துடைத்தெறிந்து விட்டு மீண்டும் மீண்டும் எழுச்சி பெறுவது நடிகர் கமலஹாசனின் மிகப்பெரிய பலம் எனலாம்.

64 years of cinema Kamal Haasan tweeted thanking for the wishes

தன்னுடைய 68 வயதிலும் விக்ரம் படத்தில், அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வரும், கமல்ஹாசனின் கைவசம் தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு படம், எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ள படம், மற்றும் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் - அமிதாப்பச்சன் போன்ற பிரபலங்களின் நடிப்பில் உருவாகிவரும், கல்கி 2898 AD ஆகிய படங்கள் உள்ளன.

OTP பகிராமல் சின்மயி குடும்பத்தில் நடந்த நூதன பண மோசடி! பல லட்சம் அபேஸ்... சைபர் கிரைமில் பரபரப்பு புகார்!

திரையுலகில் அரை நூற்றாண்டு கண்ட நடிகராக இருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு, பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இதற்க்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், "64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள நாட்கள் என் மக்களுக்காக. என பதிவிட்டுள்ளார்.

Kamalhaasan 64: திரையுலகில் 64 வருடங்கள்! கமல்ஹாசனின் சாதனையை... காமன் டிபி-யுடன் கொண்டாடும் ரசிகர்கள்!

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios