ரம்யா பாண்டியன் தங்கையோடு நடிகர் அசோக் செல்வனுக்கு திருமணமா? சமூக வலைத்தளத்தில் சூடாக்கிய தகவல்!
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கும், அசோக் செல்வன் பிரபல இளம் நடிகை ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கோலிவுட் திரையுலகில், நடிகர் விஜய் சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் வெளியான 'சூது கவ்வும்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். ஆரம்ப காலத்தில் பட வாய்ப்புகள் தேடிய போது அன்கிரெடிட் ரோல்சில் நடித்து வந்த இவருக்கு 'சூது கவ்வும்' திரைப்படம் சிறந்த அறிமுகத்தை கொடுத்ததோடு, வெற்றி படமாகவும் அமைந்தது.
இதைத்தொடர்ந்து 'பீட்சா 2 வில்லா' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இப்படம் அவருக்கு வெற்றி படமாக அமையவில்லை என்றாலும், இதை அடுத்து வெளியான 'தெகிடி' சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இந்த படத்தை தொடர்ந்து, கூட்டத்தில் ஒருவன், ஓ மை கடவுளே, மன்மத லீலை, சில நேரங்களில் சில மனிதர்கள், போர் தொழில், போன்ற வித்யாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து, தற்போது தமிழ் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை பதித்துள்ளார்.
தயாராக இருக்கும் பிக்பாஸ் சீசன் 7 ப்ரோமோ..! எப்போது ரிலீஸ்? வெளியான லேட்டஸ்ட் தகவல்..!
அதிலும் குறிப்பாக கடைசியாக வெளியான 'போர் தொழில்' திரைப்படம் அசோக் செல்வனுக்கு சூப்பர் ஹிட் வெற்றி படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் பா ரஞ்சித் தயாரிக்கும் பெயரிடாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நெஞ்சமெல்லாம் காதல் என்கிற படமும் இவரின் கைவசம் உள்ளது.
keerthi pandian
திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கும் அசோக் செல்வனுக்கு, விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. இவர் பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மகளை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும், இரு வீட்டிலும் இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில்.... விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்பட்டது.
அந்த வகையில் தற்போது அசோக் செல்வன் பிரபல இளம் நடிகையும், நடிகரும் - தயாரிப்பாளருமான அருண்பாண்டியனின் மகள், கீர்த்தி பாண்டியனை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக புது தகவல் வெளியாகி உள்ளது. கீர்த்தி பாண்டியன் பிரபல இளம் நடிகை ரம்யா பாண்டியனின் தங்கையாவார். ஆனால் இது குறித்து இரு தரப்பில் இருந்தும், இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.