OTP பகிராமல் சின்மயி குடும்பத்தில் நடந்த நூதன பண மோசடி! பல லட்சம் அபேஸ்... சைபர் கிரைமில் பரபரப்பு புகார்!
பிரபல பின்னணி பாடகி சின்மயி, தன்னுடைய குடும்பத்தினரிடம் நூதன முறையில் பண மோசடி நடைபெற்றுள்ளது குறித்து சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய மொழிகளில் பல பாடல்களை பாடி, மிகவும் பிரபலமானவர் சின்மயி. தன்னுடைய மனதில் பட்ட எதையும், ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேசி பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக வைத்திருக்கும் இவர்... அவ்வபோது தன்னுடைய சமூக வலைதளத்தில், சமூக கருத்துடைய விஷயங்களையும், சமூக அவலங்களையும் வெளிப்படுத்தி வருகிறார்.
குறிப்பாக 2018 ஆம் ஆண்டு, இவர் பிரபல கவிஞர் வைரமுத்து தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போட்ட பதிவு தற்போது வரை புகைந்து கொண்டிருக்கிறது. இவரை தொடர்ந்து அடுத்தடுத்து சில பெண் கவிஞர்களும் வைரமுத்து மீது இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஒரு தரப்பினர் சின்மையின் இந்த குற்றச்சாட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்தாலும், மற்றொரு தரப்பினர் வைரமுத்துவால் கிடைத்த பட பாடல் வாய்ப்புகளை மற்றும் பயன்படுத்திக் கொண்டு, பல வருடங்கள் கழித்து சின்மயி இப்படி கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என தெரிவித்து வந்ததையும் பார்க்க முடிந்தது.
நடிகர் சத்யராஜின் தாயாருக்கு இறுதிச்சடங்கு எப்போது? குடும்பத்தினர் கூறிய தகவல்..!
சின்மயி - வைரமுத்து இடையிலான பிரச்சனை தீர்க்க முடியாத ஒன்றாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அவ்வப்போது சின்மயி தன்னுடைய சமூக வலைதளத்தில் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது வயதானவர்களை குறிவைத்து நடக்கும், நூதன பண மோசடி குறித்து இவர் போட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீப காலமாக தொலைபேசிக்கு வரும் அழைப்புகளில், நாம் OTP எண்ணை பகிர்ந்தால் மட்டுமே பணம் பறிபோவதாக கூறப்பட்டு வந்த நிலையில், OTP-எண்ணை பகிராமலேயே நூதன மோசடி நடைபெற்று வருவதாகவும், இப்படி தன்னுடைய குடும்பத்தினர் பல லட்சத்தை இழந்துள்ளதாக சின்மயி தெரிவித்துள்ளார். அதாவது தொலைபேசிக்கு ஒரு லிங்க் அனுப்பப்படுவதாகவும், அந்த லிங்கை கிளிக் செய்ததும் வங்கியில் இருந்த பணம் காணாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார். வயதானவர்களை குறி வைத்தே இதுபோன்ற மோசடிகள் நடப்பதாகவும் தெரிவித்துள்ள சின்மயி, சைபர் கிரைமில் இதுகுறித்து புகார் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தயாராக இருக்கும் பிக்பாஸ் சீசன் 7 ப்ரோமோ..! எப்போது ரிலீஸ்? வெளியான லேட்டஸ்ட் தகவல்..!