பிக் பாஸில் மிட் வீக் எவிக்ஷன்! அதிர்ச்சியுடன் வீட்டுக்கு கிளம்பப்போவது யார்?
Bigg Boss Mid Week Eviction : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் மிட் வீக் எவிக்ஷன் நடைபெற உள்ளதாக தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
Bigg Boss Tamil season 8 Mid Week Eviction
பிக் பாஸ் டபுள் எவிக்ஷன்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் தற்போது 65 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் இதுவரை 9 வாரங்கள் முடிவடைந்துள்ளன. இதில் முதல் 8 வாரம் ஒவ்வொரு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டனர். ஆனால் கடந்த வாரம் மட்டும் டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. அதில் முதலாவதாக ஆனந்தி வெளியேற்றப்பட்ட நிலையில், பின்னர் இரண்டாவதாக சாச்சனாவை எலிமினேட் செய்து அதிர்ச்சி கொடுத்தார் விஜய் சேதுபதி.
Bigg Boss Tamil season 8 contestants
மிட் வீக் எவிக்ஷன்
பிக் பாஸ் வீட்டில் தற்போது 15 போட்டியாளர்கள் எஞ்சி உள்ளனர். நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், ஆட்கள் அதிகமாக இருப்பதால் இனி வார வாரம் டபுள் எவிக்ஷன் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், அதில் திடீர் ட்விஸ்டாக இந்த வாரம் மிட் வீக் எவிக்ஷன் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மிட் வீக் எவிக்ஷன் என்றால் வாரத்தின் நடுவே ஒரு நாளில் யாராவது போட்டியாளரை வெளியேற்றுவார்கள்.
இதையும் படியுங்கள்... சிவகார்திகேயனுக்காக ரூல்ஸை மாற்றிய பிக்பாஸ்! சர்ச்சையில் சிக்க வைத்த செம்ம சம்பவம்!
Tharshika
தப்பியது யார்?
அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய ஜாக்குலின், செளந்தர்யா, ரயான், அருண், விஜே விஷால், தர்ஷிகா, அன்ஷிதா, சத்யா, பவித்ரா ஆகிய 9 பேரில் இருந்து ஒருவர் தான் மிட் வீக் எவிக்ஷனில் வெளியேற வாய்ப்புள்ளது. இதில் தற்போதைய நிலவரப்படி ஓட்டிங்கில் ஜாக்குலின், செளந்தர்யா, பவித்ரா, ஆகியோர் அதிக வாக்குகளை பெற்று இருப்பதால் அவர்கள் வெளியேற வாய்ப்பில்லை. அதேபோல் அருண், அன்ஷிதாவுக்கும் கணிசமான ஓட்டுக்கள் கிடைத்துள்ளன.
Sathya
சிக்கியது யார்?
இதனால் எஞ்சியுள்ள சத்யா, தர்ஷிகா ஆகிய இருவரில் இருந்து ஒருவர் தான் மிட் வீக் எவிக்ஷனில் வெளியேற வாய்ப்புள்ளது. சத்யா, இந்த பிக் பாஸ் வீட்டில் இத்தனை நாட்கள் இருந்தும் இதுவரை எதுவுமே செய்யாமல் ஓப்பி அடித்து வருவதால் அவருக்கு இந்த வாரம் நாமினேஷனின் போது மிக்சர் என குத்திவிட்டனர். அநேகமாக மிட் வீக் எவிக்ஷன் நடந்தால் அதில் சத்யாவும், வார இறுதியில் நடக்கும் எவிக்ஷனில் தர்ஷிகாவும் வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்... சாச்சனாவை விட அதிக சம்பளம்; RJ ஆனந்திக்கு அள்ளிக்கொடுத்த பிக் பாஸ்! எவ்ளோ தெரியுமா?