MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சாச்சனாவை விட அதிக சம்பளம்; RJ ஆனந்திக்கு அள்ளிக்கொடுத்த பிக் பாஸ்! எவ்ளோ தெரியுமா?

சாச்சனாவை விட அதிக சம்பளம்; RJ ஆனந்திக்கு அள்ளிக்கொடுத்த பிக் பாஸ்! எவ்ளோ தெரியுமா?

Bigg Boss RJ Ananthi Salary : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் எலிமினேட் ஆன ஆர்.ஜே.ஆனந்திக்கு வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 09 2024, 07:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
RJ Ananthi, Vijay Sethupathi

RJ Ananthi, Vijay Sethupathi

பிக் பாஸ் டபுள் எவிக்‌ஷன்

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது 9 வாரங்களைக் கடந்து 10வது வாரத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரே வாரத்தில் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் ஆவது வழக்கம் தான். ஆனால் இந்த சீசனில் முதல் 8 வாரம் டபுள் எவிக்‌ஷனே நடக்காமல் இருந்த நிலையில், 9-வது வாரத்தில் டபுள் எவிக்‌ஷன் என அறிவித்து ட்விஸ்ட் கொடுத்த விஜய் சேதுபதி, அடுத்தடுத்து சாச்சனா, ஆர்.ஜே.ஆனந்தி ஆகியோரை எலிமினேட் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.

24
RJ Ananthi Eliminated

RJ Ananthi Eliminated

வெளியேறிய சாச்சனா மற்றும் ஆர்.ஜே.ஆனந்தி

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கே இவர்களின் எவிக்‌ஷன் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது. ஏனெனில் எலிமினேஷனை அறிவிக்கும் முன்னர் போட்டியாளர்கள் மனதில் யார் இருக்கிறார்கள் என விஜய் சேதுபதி கேட்டதற்கு பெரும்பாலானோர் சொன்னது ரயான் மற்றும் சத்யாவின் பெயர்கள் தான். அதில் ஒருவர் கூட ஆர்.ஜே.ஆனந்தி பெயரையோ, சாச்சனா பெயரையோ சொல்லவில்லை. அதனால் அவர்களுக்கே இந்த டபுள் எவிக்‌ஷன் எதிர்பாரா ஒன்று தான்.

இதையும் படியுங்கள்... வெயிட்டான சம்பளத்துடன் வெளியேறிய சாச்சனா - அடேங்கப்பா இத்தனை லட்சமா?

34
Bigg Boss RJ Ananthi

Bigg Boss RJ Ananthi

கண்ணீர்விட்ட அன்ஷிதா

நேற்று முதலில் ஆர்.ஜே.ஆனந்தியை தான் எலிமினேட் செய்தார் விஜய் சேதுபதி. அவர் பெயர் எலிமினேஷன் கார்டில் வந்ததை பார்த்ததும் அவரது தோழிகளான பவித்ரா, அன்ஷிதா ஆகியோர் கண்ணீர் விட்டு அழுதனர். ஆனால் ஆர்.ஜே.ஆனந்தி அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு புன்னகையோடு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். டபுள் எவிக்‌ஷனில் சிக்கி எலிமினேட் ஆன ஆர்.ஜே.ஆனந்தி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

44
RJ Ananthi Salary

RJ Ananthi Salary

ஆர்.ஜே.ஆனந்தி சம்பளம்

அதன்படி அவருக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.25 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாம். அதன்படி அவர் மொத்தம் விளையாடிய 63 நாட்களுக்கு சேர்த்து அவருக்கு 15 லட்சத்து 75 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதுவரை எலிமினேட் ஆன போட்டியாளர்களில் அதிக சம்பளத்துடன் வெளியேறிய போட்டியாளர் ஆர்.ஜே.ஆனந்தி தான். இவருடன் சேர்ந்து எலிமினேட் ஆன சாச்சனா ஒரு எபிசோடுக்கு ரூ.20 ஆயிரம் சம்பளம் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... பிக் பாஸ் டபுள் எவிக்‌ஷனில் நடந்த எதிர்பாரா ட்விஸ்ட் - எலிமினேட் ஆனது இவர்களா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே நாளில் 2 கல்யாணம்! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் 'மெகா' திருமண ஏற்பாடுகள் - முழு விவரம்
Recommended image2
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image3
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved