சினிமா ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் வெயிட்டிங்... இந்த வார ரிலீசுக்கு வரிசைகட்டும் 7 படங்கள் - ஒரு பார்வை
2023-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே தமிழ் சினிமாவில் சிறு பட்ஜெட் படங்கள் பெரியளவில் ரிலீஸ் ஆகவில்லை. இதற்கு காரணம் அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது தான். அந்த படங்களின் வருகையால் ஜனவரி மாதம் முழுக்க தமிழில் சிறுபட்ஜெட் படங்கள் அதிகளவில் ரிலீஸ் செய்யப்படவில்லை. தற்போது அந்த இரண்டு படங்களும் மூன்று வாரங்களைக் கடந்துவிட்டதால், வருகிற பிப்ரவரி 3-ந் தேதி 7 சிறு பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அவற்றை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மைக்கேல்
மைக்கேல் படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி உள்ளார். இப்படத்தில் சந்தீப் கிஷான் நாயகனாக நடித்துள்ளார். அதேபோல் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இப்படத்தை வெளியிடுகிறார். இதில் கவுதம் மேனன், வரலட்சுமி சரத்குமார், அனசுயா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பொம்மை நாயகி
மண்டேலா படத்துக்கு பின் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் பொம்மை நாயகி. ஷான் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ள இப்படத்தை பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படமும் வருகிற பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
தி கிரேட் இண்டியன் கிச்சன்
மலையாளத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் தி கிரேட் இண்டியன் கிச்சன். அப்படம் தற்போது அதே பெயரில் தமிழில் ரீமேக் ஆகி உள்ளது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கி உள்ளார்.
ரன் பேபி ரன்
ஆர்.ஜே.பாலாஜி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ரன் பேபி ரன். இதுவரை காமெடி படங்களில் நடித்து வந்த அவர், தற்போது முதன்முறையாக திரில்லர் கதையம்சம் கொண்ட படங்களில் நடித்துள்ளார். ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஹிரோயினாக நடித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... கேரள கோவிலில் அனுமதி மறுக்கப்பட்ட பின்... பழனிக்கு திடீர் விசிட் அடித்து சாமி தரிசனம் செய்த அமலா பால்
தலைக்கூத்தல்
சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி உள்ள படம் தலைக்கூத்தல். ஒய்நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்த் தயாரித்துள்ள இப்படத்தை ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கி உள்ளார். கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மார்ட்டின் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படமும் பிப்ரவரி 3-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
நான் கடவுள் இல்லை
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியுள்ள ஆக்ஷன் திரைப்படம் தான் நான் கடவுள் இல்லை. இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் சாக்ஷி அகர்வால் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மகேஷ் கே தேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
குற்றப்பின்னணி
விஷ்ணு விஷாலின் ராட்சசன் படத்தில் வில்லனாக நடித்த சரவணன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் குற்றப்பின்னணி. என்.பி.இஸ்மாயில் இயக்கியுள்ள இப்படத்தில் சிவா, தட்சாயினி, தீபாளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படமும் பிப்ரவரி 3-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... நான்காவது திருமணம் செய்யப்போவதாக அறிவித்த 60 வயது நடிகருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3-வது மனைவி