Meena 2nd Marriage: 49 வயதில் மீனாவுக்கு 2-ஆவது திருமணமா? அவரே பகிர்ந்த தகவல்!
நடிகை மீனா சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், இரண்டாவது திருமணம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு வெளிப்படையாகவும் வேதனையோடும் பதில் அளித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரம்:
தமிழ் சினிமாவில் தன்னுடைய 5 வயதிலேயே, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோயினாக உச்சம் தொட்டவர் தான் நடிகை மீனா. தன்னுடைய முதல் படத்திலேயே நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நெஞ்சங்கள் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த படம் மீனாவுக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்ததை தொடர்ந்து, தென்னிந்திய மொழிகளிலில் அடுத்தடுத்து 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
கணவரின் மலரும் நினைவுகளுடன் ஹோம் டூர் சுற்றிக் காட்டிய நடிகை மேக்னா ராஜ்!
ஹீரோயின் அவதாரம்:
14 வயதிலேயே, ஹீரோயின் வாய்ப்பு கிடைக்க அதையும் கச்சிதமாக பயன்படுத்தி கொண்டார். நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ராஜ் கிரண் நடிப்பில் வெளியாகி, சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, 'என் ராசாவின் மனசிலே' என்ற படத்தின் மூலம் மீனா கதாநாயகியாக அவதாரம் எடுத்தாலும், இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி, தமிழ் சினிமாவில் அனைவராலும் தேடப்படும் முன்னணி ஹீரோயினாக உயர்த்தியது ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்த 'எஜமான்' திரைப்படம் தான்.
ரஜினிகாந்துடன் நடித்ததால் சர்ச்சை:
அதே நேரம் ரஜினிகாந்துடன் மகள் போன்ற கதாபாத்திரத்தில் நடித்து விட்டு, அவருக்கே ஜோடியாக நடித்தது பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளானது. ஆனால் 'எஜமான்' படத்தில் ரஜினி - மீனாவின் ஜோடி பொருத்தத்தை ஏராளமான ரசிகர்கள் விரும்பினார். எனவே முத்து, வீரா, போன்ற படங்களில் அடுத்தடுத்து ஜோடி சேர்ந்து நடித்தனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
மிராய் கதை காப்பியா? 56 ஆண்டுகளுக்கு முன்பு வந்த படத்தின் சாயல்?
மீனாவின் திருமணம்:
மேலும் அப்போதைய முன்னணி ஹீரோக்களான கமல்ஹாசன், சரத்குமார், விஜயகாந்த், அர்ஜூன், அஜித், என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தார். தொடர்ந்து ஹீரோயினாக நடித்து கொண்டிருந்த மீனாவுக்கு முகத்தில் ஏற்பட்ட முதிர்ச்சியான தோற்றம் காரணமாகவும், உடல் எடை கூடியதாலும் வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குறைந்த நிலையில்... திடீர் என சின்னத்திரை பக்கம் சாய்ந்தார். அதன் பின்னர், தன்னுடைய அம்மா பார்த்து முடிவு செய்த சாஃப்ட்வேர் என்ஜினீயர் வித்யா சாகர் என்பவரை கொண்டு, சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலகினார்.
மீனாவின் மகள் நைனிகா:
தன்னுடைய மகள் பிறந்த பின்னர் மீண்டும், மலையாளம் மற்றும் சில தமிழ் படங்களில் நடிக்க துவங்கினார். மீனாவை தொடர்ந்து இவரின் மகள் நைனிகாவும், தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'தெறி' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சில படங்களில் நடித்தார். தற்போது நைனிகா படிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். எனினும் தன்னுடைய படிப்பை முடித்த பின்னர் ஹீரோயினாக களமிறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
மீனாவின் கணவர் மரணம்:
அன்பான கணவர், அழகிய மகள், என மீனாவின் குடும்ப வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில் தான் யாரும் எதிர்பாராத ஒரு சோகம், இவருடைய வாழ்க்கையை திருப்பி போட்டது. அதாவது நடிகை மீனாவின் கணவர் வித்தியா சாகர் நுரையீரல் பாதிப்பு காரணமாக கடந்த 2022-ஆம் ஆண்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். கணவரின் இழப்பு மீனாவை அதிக அளவு பாதித்த நிலையில், வீட்டுக்குளேயே தன்னை சிறை வைத்துக்கொண்டார்.
மீனாவுக்கு இரண்டாவது திருமணம்:
இவரது தோழிகள் தான் மீண்டும் மீனாவை சகஜ நிலைக்கு கொண்டு வந்தனர். தற்போது கணவரின் இழப்பில் இருந்து மீண்டு மீண்டும் சில படங்களில் நடிக்க துவங்கி இருக்கிறார். இவர் நடிக்க துவங்கியதுமே வழக்கம் போல இவரை சில கிசுகிசுவும் சுற்ற துவங்கிவிட்டது. ஏற்கனவே மீனாவின் இருந்தாவது திருமணம் குறித்து பல வதந்திகள் பரவிய நிலையில், இதுகுறித்து அவர் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பப்பட்டது.
இரண்டாவது திருமணத்தில் விருப்பம் இல்லை - மீனா
இதற்க்கு பதிலளித்த மீனா, "என் கணவர் இறந்த பின்னர் நான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன் என பல தகவல்கள் பரவியது. இது போன்ற தகவலால் நானும் என் குடும்பமும் மன வேதனை அடைந்தோம். உண்மையில் எனக்கு இரண்டாவது திருமணத்தில் விருப்பம் இல்லை. என் கனவு என் மகள் நைனிகா மட்டும் தான் என பேசி இருக்கிறார்".