- Home
- Cinema
- சக்க போடு போட்ட சிவகார்த்திகேயனின் மாவீரன்! ஒட்டு மொத்த வசூலை ஓப்பனாக கூறிய தயாரிப்பு நிறுவனம்!
சக்க போடு போட்ட சிவகார்த்திகேயனின் மாவீரன்! ஒட்டு மொத்த வசூலை ஓப்பனாக கூறிய தயாரிப்பு நிறுவனம்!
'மாவீரன்' திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் குறித்த தகவலை தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Maaveeran
இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து கடந்த ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மாவீரன்'. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருந்த நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் சரிகா, மிஷ்கின், தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு, குக் வித் கோமாளி பிரபலமான மோனிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்தை சாந்தி டாக்கிஸ் நிறுவனம் சார்பில் அருண் விஷ்வா என்பவர் தயாரித்திருந்தார். இந்த படத்தை ரெட் ஜெயின் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான 'பிரின்ஸ்' திரைப்படம் தோல்வி அடைந்த நிலையில், இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற போல், சூப்பர் பவருடன் வந்து கலக்கினார் சிவகார்த்திகேயன்.
TRP-யில் அடித்து நொறுக்கி முன்னுக்கு வரும் விஜய் டிவி தொடர்! முதலிடத்தில் எந்த சீரியல் தெரியுமா?
இப்படம் வெளியாகி ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையும்... மற்றொரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்ற நிலையில், வசூலில் கெத்து காட்டியது. நான்கு நாட்களில் சுமார் 50 கோடி வசூலித்த இந்த திரைப்படம், தற்போது வரை சில திரையரங்குகளில் 'மாவீரன்' ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், நாளைய தினம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் 'மாவீரன்' படக்குழு, இப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் குறித்த தகவலை, அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' திரைப்படம் 89 கோடி காலெக்ஷன் செய்துள்ளதாம். எனவே 100 கோடியை எட்டுவது சாத்தியம் இல்லை என்றாலும் 90 கோடியை இப்படம் நெருங்கியுள்ள தகவலை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ஷாரூக்கானுடன் மிரட்டல் லுக்கில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா! வைரலாகும் 'ஜவான்' பட புதிய போஸ்டர்!