SK20 -ல் இவர்தான் நாயகியாம்..நம்ம ஊர் பொண்ணு இல்லையா ?
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 20வது படத்தில் நாயகி யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

SK 20
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பும் நாயகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டாக்டர்’ படம் வெற்றி பெற்றது. தற்போது டான், அயலான், சிங்கப்பாதை போன்ற படங்கள் கமிட் ஆகியுள்ளார்.
SK 20
இந்த படங்களை தொடர்ந்து தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தை ‘ஜாதி ரத்னலு’ இயக்கிய டோலிவுட் இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். இப்படம் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
SK 20
SK 20 என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. சிவகங்கையில் துவங்கியுள்ள இந்த படம் சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண்ணை நாயகன் காதலித்து கரம்பிடிப்பது போன்ற கதையம்சமாகும் என சொல்லப்படுகிறது.
SK 20
இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. அதன்படி, நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் மற்றும் தெலுங்கு டீச்சராக நடிப்பதாக சொல்லப்படுகிறது.
SK 20
எஸ்.கே.20 படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகர் சத்யராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
SK 20
இந்த படத்தில் நாயகிக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியை சொல்லிக்கொடுக்கும்படியும், மரியா, சிவாவுக்கு இங்கிலீஸ் கற்றுக்கொடுக்கும் படியும் காட்சிகள் உள்ளதாம்.
SK 20
இப்படத்தில் நாயகியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரபோஷப்கா என்கிற நடிகை நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
Sivakarthikeyan
இப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனுடன் நடிகர்கள் பிரேம்ஜி, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.