- Home
- Cinema
- Premgi as villain : என்னங்க சொல்றீங்க பிரேம்ஜி வில்லனா?... அதுவும் இந்த நடிகருக்கா! என்ன கொடுமை சார் இது
Premgi as villain : என்னங்க சொல்றீங்க பிரேம்ஜி வில்லனா?... அதுவும் இந்த நடிகருக்கா! என்ன கொடுமை சார் இது
Premgi as villain : நகைச்சுவை நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக விளங்கி வந்த பிரேம்ஜி, தற்போது பிரபல நடிகருக்கு வில்லனாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரேம்ஜியின் அறிமுகம்
நடிகரும், இசையமைப்பாளருமான கங்கை அமரனின் இளைய மகனான பிரேம்ஜி, சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்கிற ஆசையில் கடந்த 1997-ம் ஆண்டு வாண்டட் என்கிற படத்தை இயக்கினார். இப்படத்தில் வெங்கட் பிரபு மற்றும் எஸ்.பி.பி.சரண் நாயகர்களாகவும், கங்கை அமரன் மற்றும் எஸ்.பி.பி காமெடியன்களாகவும் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் இப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.
பாப்புலர் ஆக்கிய சென்னை 28
இதையடுத்து யுவன் சங்கர் ராஜாவிடம் உதவியாளராக சேர்ந்த பிரேம்ஜி, பல்வேறு படங்களில் பாடல் பாடுவது, சில படங்களுக்கு பின்னணி இசை அமைப்பது என இசையின் மீது ஆர்வம் காட்டி வந்தார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கிய முதல் படமான சென்னை 28 மூலம் இவரது நகைச்சுவை நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்ததை அடுத்து நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் பிரேம்ஜி.
பன்முகத்திறமை கொண்ட கலைஞன்
அஜித், சிம்பு, சூர்யா, ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து அசத்திய பிரேம்ஜி, அவ்வப்போது சில படங்களுக்கு இசையமைப்பது, பாடல்கள் பாடுவது என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக விளங்கி வந்தார்.
பிரேம்ஜி வில்லனா?
இந்நிலையில், நடிகர் பிரேம்ஜி வில்லனாக நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே 20 படத்தில் நடித்து வருகிறார். அனுதீப் இயக்கும் இப்படத்தில் தான் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பிரேம்ஜி நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதுவரை நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த பிரேம்ஜிக்கு வில்லன் ரோல் செட் ஆகுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
எஸ்.கே.20 படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகர் சத்யராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... BB Ultimate : சிம்பு பற்றி பேசி வம்பில் சிக்கிய அனிதா.... அதுக்குனு இப்படியா சொல்லுவீங்க? - வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.