BB Ultimate : சிம்பு பற்றி பேசி வம்பில் சிக்கிய அனிதா.... அதுக்குனு இப்படியா சொல்லுவீங்க? - வைரலாகும் வீடியோ
BB Ultimate : கமலைப்போல் சிம்புவும் சிறப்பாக தொகுத்து வழங்கி வருவதாக மக்கள் பாராட்டி வரும் நிலையில், அவர் குறித்து அனிதா பேசியது சிம்பு ரசிகர்களை கோபமடையச் செய்துள்ளது.
ஓடிடி-யில் பிக்பாஸ்
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் நடந்து முடிந்திருந்தாலும், ஓடிடிக்கென பிரத்யேகமான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது முதன்முறையாக நடத்தப்பட்டு வருகிறது. பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்படுள்ள இந்நிகழ்ச்சி, 24 மணிநேரமும் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
சதீஷ் மட்டும் புதுசு
இந்நிகழ்ச்சியை பிரபலமாக்கும் வகையில் கடந்த 5 சீசன்களில் கலந்துகொண்டவர்களில் பாப்புலர் ஆனவர்கள் சிலரை தேர்ந்தெடுத்து போட்டியாளர்களாக களமிறக்கி உள்ளனர். இதில் கலக்கப்போவது யாரு பிரபலம் சதீஷ் மட்டும் புது போட்டியாளராக களமிறக்கப்பட்டு உள்ளார். இவர் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார்.
வைல்டு கார்டு எண்ட்ரி
14 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் இதுவரை சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக், அபிநய், தாடி பாலாஜி, சினேகன் ஆகியோர் இதுவரை எலிமினேட் ஆகி உள்ளனர். மன அழுத்தம் காரணமாக வனிதா பாதியிலேயே வெளியேறினார். அவருக்கு பதிலாக ரம்யா பாண்டியன் வைல்டு கார்ட் எண்ட்ரியாக வந்துள்ளார்.
கமலுக்கு பதில் சிம்பு
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் 3 வார எபிசோடை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அதன்பின் படப்பிடிப்பு பணிகள் காரணமாக அவர் விலகியதால், அவருக்கு பதில் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். கமலைப்போல் சிம்புவும் சிறப்பாக தொகுத்து வழங்கி வருவதாக மக்கள் பாராட்டி வரும் நிலையில், அவர் குறித்து அனிதா பேசியது சிம்பு ரசிகர்களை கோபமடையச் செய்துள்ளது.
சிம்பு ரசிகர்களை கடுப்பாக்கிய அனிதா
அந்த வகையில் சக போட்டியாளரான சுருதியிடம் அனிதா பேசுகையில், “நீ பேசுனது ரொம்ப ஆழமான விஷயம் இதெல்லாம் சிம்புவுக்கு புரியாது. அவர் அதுபற்றி யோசிக்கவும் மாட்டார். ஏன்னா அவர் பிக்பாஸுக்கு புதுசு. கமல் சாருக்கு இதெல்லாம் புரிஞ்சிருக்கும். அவர் 5 சீசன் ஹோஸ்ட் பண்ணி இருக்கார். ” என தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து கொந்தளித்த சிம்பு ரசிகர்கள் வரும் வாரத்தில் அனிதாவை வெளியேற்ற வேண்டும் என பிளான் போட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Prabhas Fan suicide : ராதே ஷ்யாம் படம் பார்த்த பின் பிரபாஸ் ரசிகர் தற்கொலை... காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க