Prabhas Fan suicide : ராதே ஷ்யாம் படம் பார்த்த பின் பிரபாஸ் ரசிகர் தற்கொலை... காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

Prabhas Fan suicide : ராதே ஷ்யாம் படத்திற்கு கலவையான விமர்சனம் வருவதன் காரணமாக பிரபாஸ் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 

Prabhas Fan Commits Suicide After Reading Radhe Shyams Negative Reviews

400 கோடி ரூபாய் பட்ஜெட்

பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் இரண்டரை ஆண்டு இடைவெளிக்கு பின் திரையரங்குகளில் வெளியாகி உள்ள திரைப்படம் ராதே ஷ்யாம். ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படம் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு இருந்தது.

டல் அடித்த ராதே ஷ்யாம்

கடந்த மார்ச் 11-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீசானது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தெலுங்கில் மட்டும் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்த இப்படம், பிறமொழிகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

Prabhas Fan Commits Suicide After Reading Radhe Shyams Negative Reviews

ரசிகரின் விபரீத முடிவு

இந்நிலையில், ராதே ஷ்யாம் படத்திற்கு கலவையான விமர்சனம் வருவதன் காரணமாக பிரபாஸ் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூலைச் சேர்ந்த முத்யாலா ரவி தேஜா. பிரபாஸின் தீவிர ரசிகரான இவருக்கு வயது 24. வெல்டிங் வேலை பார்த்து வந்த இவர் பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்தை காண ஆவலாக இருந்தாராம்.

அதன்படி, ராதே ஷ்யாம் ரிலீசான முதல் நாளே படத்தை தியேட்டரில் பார்த்திருக்கிறார் முத்யாலா ரவி தேஜா. படம் முடிந்த பிறகு, படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்ததை பார்த்து வருத்தமடைந்த அவர், அதுகுறித்து தனது தாயிடமும், நண்பரிடமும் சொல்லி தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளார். 

Prabhas Fan Commits Suicide After Reading Radhe Shyams Negative Reviews

தூக்கிட்டு தற்கொலை

இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த முத்யாலா ரவி தேஜா, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரின் மறைவுச் செய்தி அறிந்த நண்பர்களும், பிரபாஸ் ரசிகர்ளும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர். முத்யாலா ரவி தேஜாவின் தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... சூர்யாவை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் பட வாய்ப்பை தட்டித்தூக்கிய பிரியங்கா மோகன்! தலைவர் 169-ல் என்ன ரோல் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios