சூர்யாவை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் பட வாய்ப்பை தட்டித்தூக்கிய பிரியங்கா மோகன்! தலைவர் 169-ல் என்ன ரோல் தெரியுமா?
Thalaivar 169 Update : சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து முடித்துள்ள பிரியங்கா மோகன், அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள தலைவர் 169 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
அறிமுகப்படுத்திய நெல்சன்
நெல்சன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்த அவர், முதல் படத்திலேயே தனது அழகாலும், வெகுளித்தனமான நடிப்பாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.
சூர்யாவுக்கு ஜோடி
இதையடுத்து சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார் பிரியங்கா. பாண்டிராஜ் இயக்கிய இப்படத்தில் ஆதினி என்கிற கிராமத்து பெண் வேடத்தில் திறம்பட நடித்து பாராட்டுக்களை பெற்று வருகிறார். கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான இப்படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
டான் படத்தின் ஹீரோயின்
தற்போது இவர் நடிப்பில் டான் திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படம் வருகிற மே மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
ரஜினி பட வாய்ப்பு
இந்நிலையில், நடிகை பிரியங்கா மோகன் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது, அதன்படி அவர் நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள தலைவர் 169 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு மகளாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... Lokesh Kanagaraj : வாழ்த்து சொன்னது குத்தமா... நெல்சனை விஜய் ரசிகர்களிடம் கோர்த்துவிட்ட லோகேஷ் கனகராஜ்