Lokesh Kanagaraj : வாழ்த்து சொன்னது குத்தமா... நெல்சனை விஜய் ரசிகர்களிடம் கோர்த்துவிட்ட லோகேஷ் கனகராஜ்
Lokesh Kanagaraj : இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளான நேற்று விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. பிரபலங்கள் பலரும் லோகேஷுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
குறும்படம் மூலம் அறிமுகம்
குறும்படம் மூலம் திறமையை நிரூபித்து சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். எந்த இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாத இவருக்கு அங்கீகாரம் கொடுத்தது மாநகரம் படம் தான். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கார்த்தியின் கைதி படத்தை இயக்கியதன் மூலம் கோலிவுட்டில் பிரபலமானார்.
ஹாட்ரிக் வெற்றி
கைதி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷுக்கு கிடைத்தது. இப்படமுலம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக ஹாட்ரிக் வெற்றியை ருசித்தார் லோகேஷ். மாஸ்டர் படத்துக்கு பின்னர் லோகேஷுக்கு கமல் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். தனது தீவிர ரசிகனான லோகேஷுக்கு தனது படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தார் கமல்.
கமலுடன் கூட்டணி
அந்த வகையில் இவர்கள் கூட்டணியில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விக்ரம் படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பீஸ்ட் அப்டேட்
இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளான நேற்று விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. பிரபலங்கள் பலரும் லோகேஷுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில், பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன், டுவிட்டர் வாயிலாக லோகேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்த லோகேஷ், பீஸ்ட் அப்டேட் விடுமாறு கேட்டார். இதைப்பார்த்த விஜய் ரசிகர்கள், நெல்சனிடம் பீஸ்ட் அப்டேட் வெளியிடுமாறு கேட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Balmain : தோனி முதல் SK வரை.. பிரபலங்கள் விரும்பி அணியும் டீ-ஷர்ட்! விலை ரூ.45,000 - அப்படி அதுல என்ன ஸ்பெஷல்?