நடிச்ச எல்லா தமிழ் படமும் 100 கோடி கலெக்ஷன், யார் இந்த கோலிவுட் வசூல் ராணி?
அக்கட தேசத்தில் இருந்து வந்து கோலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் ராணியாக வலம் வரும் நடிகை ஒருவர் இதுவரை நடித்த 3 படமும் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.

கோலிவுட் வசூல் ராணி
தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட பாதி ஹீரோயின்கள் அக்கட தேசமான கேரளாவில் இருந்து வந்தவர்கள் தான். மலையாள சினிமா கொண்டாட தவறிய நடிகைகள் பலரை தமிழ் சினிமா தலையில் தூக்கிவைத்து கொண்டாடி இருக்கிறது. அப்படி கடவுளின் தேசத்தில் இருந்து வந்த நடிகை ஒருவர் தான் இன்று தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து ஜீரோ பிளாப் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
3 படமும் 100 கோடி வசூல்
அந்த நடிகை அறிமுகமானதே ரஜினி படத்தின் மூலம் தான். பின்னர் விஜய்க்கு ஜோடியாக நடித்த அவர், இதுவரை தமிழில் நடித்துள்ள நான்கு படங்களில் மூன்று திரைப்படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகின. அந்த மூன்று படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்துள்ளன. இந்த லக்கி சார்ம் நாயகிக்கு தற்போது கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன.
மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன்
அந்த நடிகை வேறுயாருமில்லை... மாளவிகா மோகனன் தான். கேரளாவில் பிறந்து வளர்ந்த மாளவிகாவுக்கு அடையாளம் கொடுத்தது தமிழ் சினிமா தான். தமிழில் ரஜினியின் பேட்ட படம் மூலம் அறிமுகமான மாளவிகாவுக்கு இரண்டாவது படமே விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய்யின் ஜேடி கதாபாத்திரத்திற்கு ஜோடியாக சாரு என்கிற கேரக்டரில் நடித்தார் மாளவிகா.
இதையும் படியுங்கள்... பிரபாஸை தொடர்ந்து 64 வயது நடிகருடன் ஜோடி சேரும் மாளவிகா மோகனன்!
மாளவிகாவுக்கு குவியும் பட வாய்ப்பு
மாஸ்டர் படத்தின் வெற்றி மாளவிகாவை பாலிவுட்டுக்கு கொண்டு சென்றது. அங்கு யுத்ரா உள்பட சில படங்களில் கமிட்டான மாளவிகா, பின்னர் பா.இரஞ்சித் இயக்கிய தங்கலான் படம் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுத்தார். இப்படத்தில் ஆரத்தி என்கிற ஆதிவாசி பெண் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் தமிழில் இவர் நடித்து தியேட்டரில் ரிலீஸ் ஆன மூன்று படங்களுமே 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டின.
மாளவிகா கைவசம் உள்ள படங்கள்
தற்போது தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக ராஜாசாப் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். இது பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது. இதுதவிர மலையாளத்தில் மோகன்லால் உடன் ஒரு படத்திலும் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். தமிழிலும் நடிகை மாளவிகா மோகனன் கைவசம் சர்தார் 2 திரைப்படம் உள்ளது. பி.எஸ்.மித்ரன் - கார்த்தி கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மாளவிகா.
இன்ஸ்டா பியூட்டி மாளவிகா மோகனன்
சினிமாவில் பிசியாக இருந்தாலும் போட்டோஷூட் நடத்துவதிலும் ஆர்வம் கொண்டவராக இருக்கும் மாளவிகா, அதன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவரின் கவர்ச்சி தரிசனத்திற்காகவே அவரை இன்ஸ்டாவில் 43 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.
இதையும் படியுங்கள்... கீர்த்தியின் திருமணத்தில் காஞ்சீவரம் பட்டு புடவையில் மாளவிகா மோகனன்!