cinema
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு டிசம்பர் 12-ஆம் தேதி கோவாவில் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. தன்னுடைய 15 வருட காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை தான் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் கீர்த்தியின் இந்த காதல் திருமணத்தில் குறிப்பிட்ட சில பிரபலங்கள் மற்றும் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
டிசம்பர் 12-ஆம் தேதி காலை, இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் நடந்த நிலையில், அன்று மாலை கிருஸ்தவ முறைப்படி திருமணம் நடந்து முடிந்தது.
ஏற்கனவே இவர் மடிசாரில் இருக்கும் புகைப்படங்கள் வெளியான நிலையில், நேற்றைய தினம் தன்னுடைய கிறிஸ்டியன் வெட்டிங் புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டிருந்தார்.
கீர்த்தியின் திருமணத்தில் காஞ்சீவரம் பட்டு சேலையில் மாளவிகா மோகனன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
பிங்க் கலர் பட்டு புடவைக்கு, கோல்டன் நிற ஜாக்கெட் அணிந்து... மாடர்னாக கட்டி இருக்கிறார் மாளவிகா மோகனன்.
அதே போல், தன்னுடைய புடவைக்கு பொருந்தும் விதத்தில் டெம்பிள் டிசைன் ஹாரம் மற்றும் பெரிய ஜிமிக்கி, வளையல், தலைநிறைய பூ என மணமகள் கீர்த்திகே டஃப் கொடுத்துள்ளார்.