MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • போனி கபூர் மகனுடன் காதல்... 49 வயதில் 2-வது திருமணத்துக்கு ஓகே சொன்ன மணிரத்னம் பட நடிகை

போனி கபூர் மகனுடன் காதல்... 49 வயதில் 2-வது திருமணத்துக்கு ஓகே சொன்ன மணிரத்னம் பட நடிகை

போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூரை காதலித்து வரும் பாலிவுட் நடிகை மலைகா அரோரா, தனது இரண்டாவது திருமணம் குறித்து இன்ஸ்டாகிராமில் சூசகமாக பதிவிட்டுள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Nov 10 2022, 02:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களை தயாரித்தவர் போனி கபூர். இவரின் மகன் அர்ஜுன் கபூர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவர் பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் மலைகா அரோராவை காதலித்து வருகிறார். இவர் மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான உயிரே படத்தில் இடம்பெற்ற தக்க தையா தையா பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

24

மலைகா அரோராவுக்கு தற்போது 49 வயது ஆகிறது. இவர் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த ஜோடிக்கு அர்ஹான் என்கிற மகன் இருக்கிறார். அவருக்கு 20 வயது ஆகிறது.

இதையும் படியுங்கள்... 'டிரைவர் ஜமுனா' படக்குழுவின் திடீர் அறிவிப்பு..! சமந்தாவுடன் மோதாமல் பின்வாங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!

34

அர்பாஸ் கானை விவாகரத்து செய்த பின்னர் அர்ஜுன் கபூர் மீது காதல் வயப்பட்ட மலைகா அரோரா, அவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை என்று கூறி அதிர்ச்சி கொடுத்திருந்தார் அர்ஜுன் கபூர்.

44

இந்நிலையில், மலைகா அரோராவின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அதில் நான் சம்மதித்துவிட்டேன் என பதிவிட்டு ஹார்டின் எமோஜிகளை போட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவர் 2வது திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளதை தான் இவ்வாறு சூசகமாக பதிவிட்டுள்ளதாக கருதி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மலைகா அரோராவுக்கும் அர்ஜுன் கபூருக்கும் 12 வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... சமந்தா படத்துக்கு இவ்ளோ மவுசா..! ரிலீசுக்கு முன்பே கோடிக்கணக்கான வசூலை வாரிக்குவித்த யசோதா

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அர்ஜுன் கபூர்
மலைக்கா அரோரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
மாமியாருக்கு செக் வைத்த மருமகன்! கார்த்திக்கின் மாஸ்டர் பிளான் - சிலை திறப்பு விழாவில் நடந்த அதிரடி ட்விஸ்ட்!
Recommended image2
Anirudh: கோடி கோடியாக கொட்டினாலும் தீராத ஏக்கம்.! அனிருத்தின் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
Recommended image3
துளசியின் சதி அம்பலமானது! அன்புவிடம் சிக்கிய ஆதாரம் - ஆனந்தியை மிரட்டும் நபரால் சீரியலில் புதிய டுவிஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved