நிதிலன் சாமிநாதனுக்கு ரூ.80 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ காரை பரிசாக கொடுத்த மகாராஜா டீம்!
Maharaja Team Gifted BMW Car to Director Nithilan Saminathan : மகாராஜா கொடுத்த பிரம்மாண்ட வெற்றிக்கு படத்தோட இயக்குநருக்கு பிஎம்டபிள்யூ காரை பரிசாக கொடுத்து தயாரிப்பு நிறுவனம் கவுரவித்துள்ளது.
Nithilan Saminathan and Vijay Sethupathi Maharaja Movie
Maharaja Team Gifted BMW Car to Director Nithilan Saminathan : விஜய் சேதுபதியின் எதார்த்தமான நடிப்பில் குறைவான பட்ஜெட்டில் திரைக்கு வந்த படம் தான் மகாராஜா. ஒரு அப்பாவிற்கும், மகளுக்குமான பிணைப்பை ஆழமாக எடுத்து இந்த சமூகத்திற்கு காட்டியிருக்கிறார் இயக்குநர் நிதிலன் சாமிநாதன். தன்னுடைய மகளுக்கு நடக்கும் அநீயாத்திற்கு பாதிக்கப்பட்ட தந்தையாக போராடும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த படத்தில் அவரோட நடிப்புக்கு தேசிய விருதே கொடுக்கலாம். அந்தளவிற்கு அவரோட நடிப்பு எதார்த்தமாகவும் படத்தின் கதைக்கு ஏற்பவும் இருந்தது.
Nithilan Saminathan BMW Car Gift
இந்தப் படம் விஜய் சேதுபதியோட 50ஆவது படம். பான் இந்தியா படமாக மகாராஜா படம் கடந்த ஜூன் 14ஆம் தேதி திரைக்கு வந்தது. பெரிய பெரிய நட்சத்திரங்கள் என்று போகாமல் எல்லாருமே சாதாரண நட்சத்திரங்களாக இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தோட பட்ஜெட் ரூ.20 கோடி என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், அது தான் உண்மை. அப்படிப்பட்ட மகாராஜா இன்று உலகளவில் ரூ.186 கோடி வரையில் வசூல் குவித்து மகத்தான சாதனையை படைத்திருக்கிறது.
22வது சென்னை சர்வதேச திரைப்பட விழா : அலேக்காக 4 விருதுகளை அள்ளிய அமரன் - முழு வின்னர்ஸ் லிஸ்ட்
Maharaja Movie Director Nithilan Saminathan
இந்தப் படம் சீனாவிலும் இப்போது வெற்றிபடமாக மாறி வருகிறது. மகாராஜா படத்தை சீன ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சீனாவில் மட்டும் இந்தப் படம் ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்துள்ளது. இப்படிப்பட்ட ஒரு அருமையான படத்தை கொடுத்த இயக்குநருக்கு படக்குழுவினர் மறக்க முடியாத பரிசை கொடுத்துள்ளனர். மகாராஜா இயக்குநர் நிதிலன் சாமிநாதனுக்கு தயாரிப்பு நிறுவனம் ரூ.80 லட்சம் மதிப்பு கொண்ட அருமையான பிஎம்டபிள்யூ காரை பரிசாக கொடுத்துள்ளது. தயாரிப்பு நிறுவனம் சார்பில் மகாராஜவின் ஹீரோவான விஜய் சேதுபதியே அந்த காரை பரிசாக கொடுத்திருக்கிறார்.
Maharaja Movie
திரையில் வெற்றியை பதித்த மகாராஜா இப்போது ஓடிடியிலும் கலக்கி வருகிறது. இதற்கிடையில் சென்னையில் நடைபெற்ற 22ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் மகாராஜா உள்பட பல படங்கள் திரையிடப்பட்டது. இதில், மகாராஜா படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மாமன் படத்தில் சூரிக்கு தங்கை – ஒரே ஒரு படத்தால சினிமா வாய்ப்பை தட்டி தூக்கிய லப்பர் பந்து நடிகை!