ரவீந்தரை திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமிக்கு இவ்வளவு பெரிய மகனா? வேஷ்டி சட்டையில் கலக்குறாரே ..!
தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்ட நடிகை மகாலட்சுமி, தன்னுடைய மகன் சச்சினுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சன் மியூசிக் தொலைக்காட்சியில், ஒரு தொகுப்பாளராக தன்னுடைய பணியை துவங்கிய மகாலட்சுமி.. பின்னர் சீரியல் நடிகையாக மாறினார். தொடர்ந்து இவருக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும், சின்னத்திரையே போதும் என்றும், வெள்ளி திரைக்கு வர விருப்பம் இல்லை என பல படங்களை நிராகரித்துவிட்டதாக கூறினார்.
மகாலட்சுமி ஏற்கனவே அனில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு சச்சின் என்ற மகன் ஒருவரும் உள்ளார். கடந்த சில வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த நிலையில், அனிலை விவாகரத்து செய்து விட்டு கடந்த ஆண்டு பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
விவாகரத்துக்கு முன்பு, பலமுறை மகாலட்சுமியுடன் சேர்ந்து வாழ, முதல் கணவர் அனில் விருப்பம் தெரிவித்த போதிலும், மகாலட்சுமி அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவருடன் சேர்ந்து வாழ கூடாது என்பதிலும் உறுதியாக இருந்து டைவர்ஸ் பெற்றார்.
இதைத்தொடர்ந்து மகாலட்சுமி கடந்த ஆண்டு பிரபல தயாரிப்பாளரான ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண புகைப்படம் வெளியான போது, இது ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்டதா? என பலர் சந்தேக கேள்வியை எழுப்பிய நிலையில், பின்பு அது உண்மையிலேயே அவர்கள் இருவருக்கும் நடந்த திருமணம் தான் என தெரியவந்தது.
இவர்களின் திருமணத்திற்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்ட போதிலும், அதையெல்லாம் மிகவும் துணிச்சலாக எதிர்கொண்டு, மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் ஆகியோர் பதிலடி கொடுத்தனர். மேலும் இருவரும் ஒன்றரை வருடங்கள் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.
மஹாலட்சுமி திருமணத்திற்கு பிறகும், தொடர்ந்து சின்ன திரையில் கவனம் செலுத்தி வரும் நிலையில், தற்போது தன்னுடைய மகன் சச்சினோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதைப் பார்த்து ரசிகர்கள் பலரும், மகாலட்சுமிக்கு இவ்வளவு பெரிய மகனா? என ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படத்தில் மகாலட்சுமியின் மகன் அப்படியே அவரை போலவே இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். வேஷ்டி சட்டையில் மிகவும் க்யூட்டாக இருக்கும் மகாலட்சுமியின் மகன் சச்சினின் புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.