55 வயதிலும் ராஜ வாழ்க்கை வாழும் நடிகர் மாதவன்; இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா?
நடிகர் மாதவன் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Actor Madhavan Net Worth
2001 ஆம் ஆண்டு 'ரஹ்னா ஹை தேரே தில் மே' படத்தில் தனது நடிப்பால் பாராட்டுகளைப் பெற்றார் மாதவன். அதற்கு முன்பு, ஜோதிகாவுடன் டோலி சஜா கே ரக்னா (1998) படத்தில் நடித்திருந்தார். இந்த படங்களைக் காட்டிலும் அவருக்கு பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான அலைப்பாயுதே திரைப்படம் தான். இப்படத்தின் மூலம் தான் அவருக்கு சாக்லேட் பாய் இமேஜ் கிடைத்தது.
மாதவன் பிறந்தநாள்
நடிகர் மாதவன் ஜூன் 1ந் தேதியான இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1970 ஆம் ஆண்டு ஜம்ஷெட்பூரில் பிறந்த இவர், தமிழ் மற்றும் இந்தியில் தன்னுடைய நடிப்பால் கவனம் ஈர்த்தார். நடிகர் மாதவன் நடிகராக மட்டுமின்றி கடந்த 2023-ம் ஆண்டு வெளிவந்த ராக்கெட்ரி படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இப்படத்தை இயக்கியதோடு மட்டுமின்றி அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார் மாதவன். இது முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் கலக்கும் மாதவன்
அண்மையில் கேசரி 2 படத்தில் அக்ஷய் குமாருடன் வழக்கறிஞர் நெவில் மெக்கின்லேவாக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார் மாதவன். அதேபோல் அஜய் தேவ்கனின் சைத்தான் படத்தில் மாதவன் கொடூர வில்லனாக நடித்து ரசிகர்களை மிரள வைத்தார். தமிழில் இவர் நடிப்பில் கடைசியாக டெஸ்ட் திரைப்படம் வெளியானது. சசிகாந்த் இயக்கிய இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் ஓடிடியில் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.
மாதவன் சம்பளம்
ராஜ்குமார் ஹிரானியின் 3 இடியட்ஸ் படத்தில் நடிக்க மாதவனுக்கு 65 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. இது 2009 ஆம் ஆண்டு அவரின் சம்பள நிலவரம். இருப்பினும், கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த சைத்தான் வெப் தொடருக்காக அவருக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. கடந்த 15-16 ஆண்டுகளில் ஆர். மாதவனின் சம்பளம் எதிர்பாராத விதமாக 1468 சதவீதம் உயர்ந்துள்ளது. அவர் வருடத்திற்கு 12 முதல் 15 கோடி வரை சம்பாதிக்கிறார்.
மாதவன் சொத்து மதிப்பு
நடிகர் மாதவனின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 115 கோடி இருக்குமாம். அவர் மனம் போன போக்கில் செல்பவர், கதை பிடித்திருந்தால் மட்டுமே படங்களில் நடிப்பார். கடந்த நான்கு ஆண்டுகளாக தான் பணம் சம்பாதிக்கவில்லை என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். நடிகர் மாதவனுக்கு பைக்குகளின் மீதும் ஆர்வம் அதிகம். அவர் ஏராளமான சொகுசு பைக்குகளை வாங்கி வைத்திருக்கிறார். அவரிடம் இருக்கும் கார்களை விட பைக்குகள் தான் அதிகம்.