MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Madhavan: மாதவன் நடிக்கும் ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று பட டைட்டில் லுக் வெளியானது!

Madhavan: மாதவன் நடிக்கும் ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று பட டைட்டில் லுக் வெளியானது!

மாதவன் நடிப்பில் உருவாகி வரும் மறைந்த விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியிருக்கிறது.  

2 Min read
Author : manimegalai a
Published : Feb 18 2025, 07:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
முதல் படத்திலேயே அலைபாய வைத்த மாதவம்

முதல் படத்திலேயே அலைபாய வைத்த மாதவம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மாதவன், தமிழ் சினிமாவில் அலைபாயுதே படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் கொடுத்த சூப்பர் டூப்பர் ஹிட்டுக்கு பிறகு மாதவனுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தது. அவரை சாக்லேட் பாயாகவும் மாற்றியது. 90ஸ் கிட்ஸ்களின் கனவு கண்ணனாக வலம் வந்த மாதவன் அடுத்தடுத்து தேர்வு செய்த படங்கள் இவரை தமிழ் சினிமாவில் நிலையான ஹீரோவாக வலம் வர வைத்தது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அடுத்தடுத்து குவிந்த பட வாய்ப்புகள்:

அடுத்தடுத்து குவிந்த பட வாய்ப்புகள்:

அந்த வகையில், என்னவளே, மின்னலே, பார்த்தாலே பரவசம், ரன், அன்பே சிவம், ஜே ஜே என்று ஏராளமான படங்களில் நடித்தார். ஆரம்பத்தில் வரிசையாக ஹிட் கொடுத்த மாதவனுக்கு அடுத்தடுத்த சில படங்கள் தோல்வி பயத்தை காட்டியது. காலில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக... 4 வருடங்களுக்கு மேல் திரையுலகிய விட்டு ஒதுங்கிய மாதவன், சில பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்த துவங்கினார்.

தமிழில் வெயிட்டான கம் பேக் கொடுக்க காத்திருந்த இவருக்கு, இறுதிச் சுற்று படம் தரமான வெற்றியை கொடுத்தது. இதன் பின்னர் ராக்கெட்ரி:தி நம்பி எஃபெக்ட் என்ற படத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணன் ரோலில் நடித்தார். இந்தப் படத்தை அவரே இயக்கவும் செய்திருந்தார். இந்தப் படத்திற்கு அவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது. 

35
விஞ்ஞானி ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படம்:

விஞ்ஞானி ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படம்:

 இந்த நிலையில் தான் தற்போது மீண்டும் பயோபிக் படத்தில் நடிக்கிறார் மாதவன். மறைந்த விஞ்ஞானி ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படம் உருவாக உள்ளது. இந்தப் படத்தில் ஜிடி நாயுடுவாக மாதவன் நடிக்கிறார். ஏற்கனவே இந்த தகவல் வெளியான நிலையில், தற்போது இந்தப் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு ஜிடிஎன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
 

45
95 சதவீதம் படப்பிடிப்பு நிறைவு:

95 சதவீதம் படப்பிடிப்பு நிறைவு:

ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட் படத்தை தயாரித்த Tricolours Entertainment Pvt Ltd, Varghese Moolan Pictures, Mediamax Productions ஆகிய நிறுவனங்கள் தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. ஜிடிஎன் படத்தில் மாதவன் உடன் இணைந்து ஜெயராம், யோகி பாபு, பிரியாமணி ஆகியோர் பலர் நடிக்கின்றனர். கோயம்புத்தூரில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு 95 சதவீதம் முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜிடிஎன் படத்தின் எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர் முரளிதரன் சுப்ரமணியம் கூறுகையில்,  ஜிடிஎன் படத்தின் 95 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்தப் படத்தின் பெரும்பாலான பகுதிகள் கலாச்சாரத்தை பின்னணியாக கொண்ட இடங்களில் எடுக்கப்பட்டுவிட்டது.
 

55
மாதவனை தேர்வு செய்தது ஏன்?

மாதவனை தேர்வு செய்தது ஏன்?

இந்தப் படம் ஜிடி நாயுடுவின் தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த வாழ்க்கையை பற்றிய படம். இந்த படத்திற்காக டைரக்டரும் அவரது டீமும் கிட்டதட்ட 5 ஆண்டுகள் ரிசர்ச் செய்த பிறகு தான் படத்தின் கதையை உருவாக்கி, ஷூட்டிங் வேலைகளை துவக்கி உள்ளனர் என்றார். 

மாதவனை தேர்வு செய்தது ஏன்? என்கிற கேள்விக்கு...  இந்தியாவின் எடிசன் என்றும், கோவையின் செல்வ உற்பத்தியாளர் என்றும் போற்றப்படும் ஜி.டி.நாயுடு, பல கண்டிபிடிப்புக்களை நாட்டிற்கு அளித்துள்ளார். இந்தியாவில் முதல் மின் மோட்டாரை தயார் செய்தவர் இவர் தான். இவரது கதையில் நடிப்பதற்கு யார் பொருத்தமாக இருப்பார் என யோசித்த போது, ராக்கெட்ரி படத்தில் சிறப்பாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மாதவன் தான் நினைவிற்கு வந்தார் என்றார். இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்திற்கு கோவிந்த் வந்தா இசையமைக்கிறார். இந்தியாவில் எடுக்கப்படும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டுவிட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Recommended image3
6 மணி காட்சி முதல் 100 ரூபாய் டிக்கெட் வரை அரசுக்கு பறந்த 13 கோரிக்கைகள்! அனுமதி கொடுப்பாரா முதல்வர்? காத்திருக்கும் திரையுலகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved