மணிரத்னம் பட டைட்டில்களால் உருவான அடிபொலி ஹிட் பாடல் பற்றி தெரியுமா?
தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களுக்கு லிரிக்ஸ் எழுதி உள்ள மதன் கார்க்கி, மணிரத்னம் பட டைட்டில்களை வைத்தே ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் பாடலை கொடுத்துள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.

Kushi Movie Song Secret
தமிழ் சினிமாவில் பல்வேறு மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்திருப்பவர் மணிரத்னம். அவர் தன்னுடைய படங்களுக்கு மக்களோடு கனெக்ட் ஆகக் கூடிய பெயர்களை தேர்வு செய்து வைப்பார். அப்படி மணிரத்னம் தன் படங்களுக்கு பார்த்து, பார்த்து வைத்த டைட்டில்களை மையமாக வைத்தே ஒரு பாடல் தமிழ் சினிமாவில் வந்திருக்கிறது. அந்த டைட்டில்களை அழகாக தொகுத்து ஒரு சூப்பர் ஹிட் பாடலாக கொடுத்த பெருமை கவிஞர் மதன் கார்க்கியை தான் சேரும். மணிரத்னம் பட டைட்டில்களை வைத்து உருவான அந்த பாடல் எது, அது எந்த படத்தில் இடம்பெற்றிருக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம்.
குஷி பாடல் ரகசியம்
அந்தப் பாடல், கடந்த 2023-ம் ஆண்டு விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்தில் இடம்பெற்று உள்ளது. அப்படத்தில் வரும் ‘என் ரோஜா நீயா’ பாடலில் தான் மணிரத்னம் பட டைட்டில்களை பயன்படுத்தி அழகாக எழுதி இருப்பார் மதன் கார்க்கி. தெலுங்கில் உருவாகி தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆன இப்படத்தை ஷிவா நிர்வாணா இயக்கி இருந்தார். இப்படத்திற்கு ஹேசம் அப்துல் வஹாப் இசையமைத்து இருந்தார். இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படம் தமிழில் மாபெரும் வெற்றியை ருசித்தது.
மதன் கார்க்கியின் மேஜிக்
என்ன தான் இது ஒரு டப்பிங் படமாக இருந்தாலும் இப்படத்துடைய தமிழ் வெர்ஷன் பாடல்களுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. குறிப்பாக இதில் இடம்பெற்ற என் ரோஜா நீயா பாடல் பலராலும் ரசிக்கப்பட்ட பாடல்களில் ஒன்று, அதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது. அதுதான் இதன் பாடல் வரிகள். மதன் கார்க்கி சும்மா விளையாடி இருப்பார். இந்த வரிகளை கேட்டாலே உங்களுக்கு புரியும்.
மணிரத்னம் பட டைட்டில்களால் உருவான பாட்டு
என் கடல்-லில் அலைபாயும் ஓர் மெளன ராகம் நீதானே காற்று வெளியிடை எல்லாம் நாம் இருவர் பறந்து செல்லத் தானே... நான் நாயகன் ஆனால் என் நாயகி நீ தானே, நான் ராவணன் ஆனால் என் ஈழமே நீதானே... ஊ நாலும் ஊ சொல்லி... ஊஹூ நாலும் ஊ சொல்லு ஓகே கண்மணியே... என் ரோஜா நீயா... என் உயிரே நீயா, என் அஞ்சலி நீயா... கீதாஞ்சலி நீயா...! என எழுதி இருப்பார். இந்த வரிகளில் மட்டும் மொத்தம் 12 மணிரத்னம் பட டைட்டில்களை பயன்படுத்தி இருப்பார் மதன் கார்க்கி.
என் ரோஜா நீயா பாடல் ரகசியம்
இதுமட்டுமின்றி, இந்த பாடலில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. சமந்தா காஷ்மீரில் இருக்கும் போதும் அவர் தன்னுடைய பெயரை ஆரா பேகம் என சொல்லி இருப்பார். இதையும் பாடல் வரிகளில் கொண்டு வரும் விதமாக, பாடலின் தொடக்கத்திலேயே, ஆரா உன் பேரா என எழுதி இருப்பார் மதன் கார்க்கி. அதேபோல் இந்த பாடல் முடியும் போது ‘இந்த வான்மேகம் யார் என்று... என் மோகம் யார் என்று பேகம் சொல்வாயா’ என எழுதி இருப்பார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

