- Home
- Cinema
- இசைக்கருவிகளே இல்லாமல் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உருவாக்கிய அடிபொலி ஹிட் பாடல் பற்றி தெரியுமா?
இசைக்கருவிகளே இல்லாமல் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உருவாக்கிய அடிபொலி ஹிட் பாடல் பற்றி தெரியுமா?
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவர் இசைக்கருவிகள் எதுவும் பயன்படுத்தாமல் உருவாக்கிய பாடல் ஒன்றைப்பற்றி பார்க்கலாம்.

A capella Song by AR Rahman
மணிரத்னம் இயக்கத்தில் உருவான ரோஜா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். இளையராஜா ஆதிக்கம் செலுத்தி வந்த காலகட்டத்தில், புயல் போல் மாஸ் எண்ட்ரி கொடுத்தவர் தான் ஏ.ஆர். ரகுமான். அவர் தனது முதல் படத்திலேயே தன்னுடைய இசையால் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தார். ரோஜா படத்துக்காக தேசிய விருதை வென்று அசத்தினார் ஏ.ஆர்.ரகுமான். அறிமுகமான முதல் படத்திலேயே கோலோச்சிய ஏ.ஆர்.ரகுமான், அதிக தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் என்கிற சாதனையையும் படைத்திருக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமான் பாடல் ரகசியம்
ரோஜாவில் தொடங்கிய அவரது இசைப் பயணம் இன்று 30 ஆண்டுகளைத் தாண்டி தொடர்கிறது. இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக மட்டுமல்ல, உலக அளவிலும் தனித்த அடையாளம் பெற்றவராக ரகுமான் திகழ்கிறார். ஒரே மாதிரியான இசையில் சிக்கிக்கொள்ளாமல், ஒவ்வொரு படத்திற்கும் புதிய முயற்சிகளை மேற்கொள்வதே அவரது தனிச்சிறப்பு. அதில் முக்கியமான ஒன்று, இசைக்கருவிகளே இல்லாமல் ஒரு பாடலை உருவாக்கிய முதல் இசையமைப்பாளர் என்கிற சாதனையை படைத்தவர் ஏ.ஆர்.ரகுமான்.
இசைக்கருவிகளே இல்லாத பாடல்
மணிரத்னம் உடன் ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி அமைத்தால் அப்படத்தின் பாடல்கள் கன்ஃபார் ஹிட்டு தான். அப்படி ரோஜாவுக்குப் பிறகு அவர்கள் இணைந்த படம் திருடா திருடா. பிரசாந்த் நாயகனாக நடித்த இப்படத்தில் ஹீரா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், சலீம் கோஸ், அனு அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ஸுக்காக தேசிய விருதையும் பெற்ற இப்படம், இசையாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
திருடா திருடா படத்தின் அனைத்து பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், அதில் இடம்பெற்ற “ராசாத்தி என் உசுரு எனதில்ல” என்ற பாடல் இசை ரசிகர்களிடையே தனி இடத்தை பிடித்தது. இந்தப் பாடலுக்கான கம்போசிங்கின்போது எந்த இசைக்கருவியும் பயன்படுத்தப்படவில்லை என்பதே அதிர்ச்சியூட்டும் உண்மை.
ஏ.ஆர்.ரகுமானின் அகபெல்லா பாடல்
இந்தப் பாடலை ஷாகுல் ஹமீது பாடியிருந்தார். இசைக்கருவிகள் இல்லாமல் பாடல் எப்படி உருவாகும் என்ற கேள்வி எழும், அகபெல்லா (A Cappella) எனப்படும் கோரஸ் குரல் அமைப்பை பயன்படுத்தி தான் ரகுமான் இப்பாடலை உருவாக்கினார். அதன்படி மனிதக் குரல்களையே பின்னணி இசையாக மாற்றி, பாடலுக்கு முழுமையான வடிவம் கொடுத்தார். இதுதான் இந்தியத் திரையுலகில் இசைக்கருவிகள் இல்லாமல் உருவாக்கப்பட்ட முதல் பாடல் என சொல்லப்படுகிறது. இதன் மூலம், ஏ.ஆர்.ரகுமான் ஒரு இசையமைப்பாளர் மட்டுமல்ல, புதுமைகளை சாத்தியமாக்கும் ஜீனியஸ் என்பதையும் மீண்டும் நிரூபித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

