- Home
- Cinema
- சிம்புவுக்காக வாய்ஸை மாற்றி ஜானகி ஆண் குரலில் பாடிய பாடல்... பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான கதை தெரியுமா?
சிம்புவுக்காக வாய்ஸை மாற்றி ஜானகி ஆண் குரலில் பாடிய பாடல்... பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான கதை தெரியுமா?
பாடகி எஸ் ஜானகி, நடிகர் சிம்புவுக்காக தன்னுடைய குரலை மாற்றி பாடிய பாடல் ஒன்று கிளாசிக் ஹிட் பாடலாக அமைந்திருக்கிறது. அது எந்த பாடல் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Singer S Janaki Sing this Super Hit Song in Male Voice
பாடகி எஸ். ஜானகி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்ததற்கு, அவரது அபாரமான பலகுரல் திறமை முக்கிய காரணமாக அமைந்தது. வயது, பாலினம், கதாபாத்திரத்தின் மனநிலை என எதுவாக இருந்தாலும், அதற்கு ஏற்றவாறு குரலை முழுமையாக மாற்றி பாடுவதில் அவர் கில்லாடி. 60 வயது மூதாட்டி முதல் 6 வயது மழலை குழந்தை வரை, ஒவ்வொரு குரலையும் இயல்பாக வெளிப்படுத்திய பாடகி ஜானகி, பல படங்களில் தனது திறமையால் ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.
சிம்புவுக்காக பாடிய ஜானகி
அந்த வரிசையில், நடிகர் சிலம்பரசனுக்காக ஜானகி பாடிய ஒரு சிறப்பு பாடல் இன்று வரை பேசப்படுகிறது. இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தர், தனது மகன் சிலம்பரசனை சிறுவயதிலிருந்தே திரையுலகில் அறிமுகப்படுத்தி நடிக்க வைத்து வந்தார். 1989-ம் ஆண்டு வெளியான ‘சம்சார சங்கீதம்’ திரைப்படத்தில், தந்தை–மகன் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்ததும் டி. ராஜேந்தரே. இந்த படத்தில் இடம்பெற்ற ‘ஐ ஆம் எ லிட்டில் ஸ்டார்’ என்ற பாடல், சிம்புவின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.
ஆண் குரலில் பாடிய ஜானகி
“ஐ ஆம் எ லிட்டில் ஸ்டார்… ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்” என்ற வரிகளுடன், மழலை குரலில் பாடப்பட்ட அந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் பெரும் வரவேற்பை பெற்றது. ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், அந்த பாடலை பாடியது எந்தக் குழந்தையும் அல்ல; தனது குரலை மழலையாக ஆண் குரலாக மாற்றி பாடியவர் எஸ். ஜானகி தான். இந்தப் பாடல் சிம்புவின் ஆரம்ப கால அடையாளமாகவும் மாறியது. அதேபோல், குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷாலினிக்காகவும் பல படங்களில் ஜானகி மழலை குரலில் பாடி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
ஜானகியின் தனித்திறமை
இதற்கு முன்பே, 1981-ம் ஆண்டு பாக்யராஜ் நடித்த ‘மௌன கீதங்கள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘டாடி டாடி ஓ மை டாடி’ பாடலும் சிறுவன் குரலில் பாடப்பட்டு சூப்பர் ஹிட் ஆனது. அந்தப் பாடலையும் பாடியது ஜானகி தான் என்பது பலருக்குத் தெரியாத ஒரு சுவாரசிய தகவல். அதேபோல், ரஜினிகாந்துடன் நடித்த சிறுவன் பாடுவது போல அமைந்த ‘பேஸ்ட் இருக்கு பிரஷ் இருக்கு எழுந்திரு மாமா’ (ரங்கா) பாடலும், ஜானகியின் குரல் மாயாஜாலத்தின் இன்னொரு உதாரணம்.
இவ்வாறு, ஒரே குரலில் பல மாயாஜாலங்களை உருவாக்கிய எஸ். ஜானகி, தனது அசாத்திய திறமையால் காலத்தை கடந்தும் கொண்டாடப்படும் பாடகியாக இருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

